Sunday 27 April 2014

நடுத்தர நடிகர்கள்

                        நடுத்தர  நடிகர்கள்
                                 
                                       ஜனநெருக்கடி  நிறைந்த குடியிருப்பு பகுதியில் அது. பெரும்பாலானோர் தினக்கூலிகள். அதில் கட்டட தொழிலாளர்கள் வாழும் தெவில் தான் சிறுவயது முதல் வளர்ந்தாள். அவளுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை. கட்டட வேலை பார்க்கும் தாய் மட்டும் தான். பார்ப்பதற்கு உயரமாக விளையாட்டு வீராங்கனைப் போல காட்சியளிப்பாள். முகத்தில் பவ்வியம் சிறிதும் இருக்காது. தோரனை தான் நிரம்பிவழியும். எதற்கும் அஞ்சாமல், தனக்கு சரி என்று பட்டால் மட்டுமே செய்வாள். அவள் தாய் அவளுக்கு நேர்மாறானவள். மிகவும் ஒல்லியாக, பார்ப்பதற்கு சாதுவாக இருப்பாள். குணமும் அப்படி தான். நம் செயலை பார்த்து சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று எப்போதும் சமுதாயத்தின் வாய் பேச்சுக்கு அஞ்சியே வாழ்பவள். எப்படியோ தன் மகள் படிக்க விரும்பியதை அருகில் உள்ள பெரிய கல்லூரியில் படிக்க வைத்துவிட்டாள். இன்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
                பஞ்சக்கா என்னைக்கு தான் என் மகளுக்கு பட்டம் தராங்கலாம்
                அதான் நேத்தே நிறையாதடவ  சொல்லிடியே. இன்னும் ஒரு தடவ சொல்லு ஆயிரமாவது தடவ சொல்றனு போஸ்டர் ஒட்டுவோம்
                                 அம்மா வாம நேரச்சு
                                   உள்ளே சென்று கட்டில் மேல் இருந்த புதிய புடவையை எடுத்து  விரித்தாள்.
                  புதுசா இருக்கு யாரோடதுமா?”
                                    பெரிய இடத்துக்கு போறோம். படிச்சவுங்க பணக்காரங்க வருவாங்க. அங்க என் சேலைய கட்டிட்டு வரமுடியுமா? அசிங்கமாயிருக்கும். அதான் பாரதி அம்மாட்ட ஒரு புடவைய ஒரு நாள் மட்டும் தாங்கனு வாங்கிட்டு வந்தேன். உனக்கும் பாரதியோட சுடிதார் ஒன்னு வாங்கிட்டு வந்தேன். அத போட்டுக்கோ
                               தூக்கி போடுமா அத. எனக்கு தான் பட்டம் தராங்க. நம்ம துணிக்கு இல்ல. பணக்காரங்க படிச்சவுங்க அசிங்கமா நினைக்க நாம என்ன ஒன்னும் போடாமையா போறோம். உழைச்ச காசுல வாங்குன துணி தான் நம்ம மானத்தையும் தன்மானத்தையும் காப்பாத்தும். உன் உழைப்ப நீயே இழிவுபடுத்தாத
                                அதுக்கு இல்லம்மா. சமுதாயத்துல நாலு பேரு நம்மல பாப்பாங்கள்ல அவுங்களுக்கா நம்ம நல்ல துணி போடனும்மா
                ஏம்மா எப்ப பாத்தாலும் சமுதாயத்துல இப்பிடி நினைப்பாங்க அப்பிடி நினைப்பாங்கனே சொல்ற அவுங்களுக்காகவா நாம வாழனும்? அப்ப நம்மளுக்குனு எதுக்கு தனியா பெயரு? நீ உனக்கு பிடிச்ச உங்க கல்யாண புடவைய கட்டு. நான் என் பிறந்த நாளுக்கு நீ எடுத்துக் கொடுத்த வெள்ளை சுடிதார போட்டுகிறேன்
                                     மிகவும் ஏழ்மையில் வாழ்பவர்கள் கூட சமுதாயத்தின் பேச்சுக்கு எந்தவிதத்திலும் பயங்கொள்ளாமல் வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள். ஆனால் இந்த நடுத்தரம் தான் சமுதாயத்துக்கு பயந்து பயந்து, தங்கள் எதார்த்தமான சிறிய ஆசைகளை கூடநாலு பேரு பேசுவாங்கஎன்று வேண்டா வெறுப்பாக துறக்கிறது. இது தான் கௌரவம் என்று மேல் தட்டை பார்த்து அவர்களாகவே ஒரு குருட்டு தனமான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதை நோக்கியே ஓடுகிறார்கள். அதுதான் தங்கள் வாழ்வை உயர்த்துவதுக்கான அதிகபட்ச செயல்பாடு என கனாக்கானுகிறார்கள். இந்த தாயும் அந்த வகையை சார்ந்தவள் தான்.
                கல்லூரி வளாகத்தில் அடையாள அட்டையை காட்டி இருவரும் உள்ளே சென்றனர். அது ஒரு பெயர் போன பணக்காரர்கள் பயிலும் கல்லூரி. விழாற்கு வந்திருந்த பெற்றோர்கள் கோட்டும் சூட்டுமாக இருந்தனர். ஆடம்பரத்தின் நெடி எங்கும் பரவி இருந்தது. இவற்றை பார்த்தவுடன் தாய்க்கு பயம் தொற்றிக்கொண்டது. அங்கு வந்தவர்கள் இவர்கள் இருவரையும் சம்மந்தமே இல்லாதவர்களாக கருதி பார்த்தனர்.
                ஏம்மா எல்லாரும் கோட்டு போட்டு வந்திருக்காங்க?”
                                வெளிநாட்டுகாரங்க கோட்டுப் போட்டு திரியிராங்கள்ல. அதான் ஏன் எதுக்குனு கூட யோசிக்காம இந்த வேகாத வெயில்ல இப்பிடி இவங்களும் திரியிராங்க. இப்பிடி எல்லாம் கண்மூடி தனமா அவுங்கள பின்பற்றுனா தான் படிச்சவுங்கனு இப்ப மதிக்கிறாங்க. நீ இத எல்லாம் கண்டுக்காத  
                 இருவரும் விருந்து அறைக்கு சென்றனர். சுற்றி இருப்பவர்களை வெறித்து பார்த்துக் கொண்டே அவள் மகள் பிடியில் இருந்து விலகி கூட்டத்தில் கலந்துவிட்டாள். சிறிது நேரத்தில் அதை உணர்ந்து, தாய்யை தேடிக்கொண்டிருந்தாள். அப்போது தூரத்தில் யாரோ கோவமாக கத்துவது போல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். தன் தாய் எதிரே ஒருவர் பலமாக கத்திக்கொண்டிருப்பத்தை பார்த்தாள்.
                 “who allowed these people inside the function hall. Mr. rakesh, whats happening here. This is the way you conduct the function? Take these unnecessary idiots out of this place. Otherwise Ill file complaint to your correspondent. Make it fast ”
                   “very sorry sir. Its my mistake . I take her out.”
                            ஆங்கிலத்தில் அவள் வாங்கிய அர்ச்சனைக்கு அர்த்தம் கூட தெரியாமல் அவமானத்தில் அழுதுக்கொண்டிருந்தாள். சுற்றி இருப்பவர்கள் அவளை ஏலனமாய் பார்த்தது, உடல் எங்கும் கூசுவது போல் இருந்தது அவளுக்கு. தன் தாய்க்கு என்ன நேர்ந்தது என்பதை உணர்ந்த அவள், அங்கு வேகமாக ஓடி வந்தாள்.
          “Mr., you thinking that you are well educated and disciplined then my mom. But you don’t have even basic manner to talk in public. How dare you told my mom as unnecessary idiot. I think you got education in corporation toilets. Even after saw NO SMOKING board you still contn. Your smoking. Did you have any common sence. You don’t have any rights to shout about anyone. Rakesh sir through this idiot out of campass. Mr. say sorry to my mom”
              “what? I want to say sorry? Shit…. rakesh This is big insult to me. Bye.”
              “Dash get out of my sight”
             கோட்டு போட்ட அந்த ஆசாமி வெளியேறினான். தன் மகள் கைகளை பற்றிக்கொண்டு,
                 அதான் சொன்னே அந்த துணியவே போட்டுருக்கலாம்னு
                      அம்மா இத்தன பேருக்கு முன்னாடி சிகிரெட் பிடிக்கிறான். இவன் நம்மல மதிச்சா என்ன மதிக்கலனா என்னா?”
             அவுங்க படிச்சவுங்கம்மா
            என்னத்த பெரிய படிச்சவுங்க. அவுங்க படிச்சாங்க அவுங்க குடும்பத்துக்கு செஞ்சாங்க. நாட்டுக்கு என்ன லாபம்? அவுங்க லெட்சனத்த தான் இப்ப பாத்தோமே. அவுங்கள விட நாம என்ன தாழ்ந்திட்டோம்?”
              அவள் கூறுவதும் சரி தான். அணு, துகள், நீயுட்ரான் என்று பாடம் நடத்தும் வேதியல் வாத்தியாரே, அறிவியலை நாடாமல் ஆன்மீகத்தில் மயங் கிடக்கிறார்கள். இவர்களுக்கும் பட்டப்படிப்பு இல்லாத பாமரனுக்கும் என்ன வித்தியாசம். படித்தவர்கள் தாங்கள் பெற்ற தாக கூறும் அறிவை மற்றவர்களுக்கோ, இல்லை வாழ்க்கையை நெறி செய்யவோ உபயோகிப்பது இல்லை. வெறுமன வயிற்றை கலுவத்தான் பயன்படுத்துகின்றனர்.
             எல்லாரும் என்ன கேவலமா பார்தாங்க
        அம்மா இதுக்கு போய் நீ ஏன் கவலபடுற. இப்ப நம்மள இந்த துணீல எலக்காரமா பார்க்குரவுங்க. நாளைக்கு பெரும் புகழ் கடச்ச உடனே, இதே துணிய எளிமைனு தூக்கிவச்சு பேசுவாங்கம்மா
                                அப்பிடி அவரு என்ன ஏன் திட்டுனாரு
            அவுங்கள போல முகத்திரைய போட்டுக்கிட்டு, நமக்கான அடையாளத்த தூக்கிப் போட்டுட்டு, சாயத்த பூசிக்கிட்டு, போலி கௌரவத்த தலைல தூக்கி வச்சு ஆடாம இப்பிடி நீ நீயாவே வந்திருக்கியேனு கேட்டாரு
                                      


வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை

வாழ்க்கை  என்பது  ஒரு  நாடக  மேடை
                                  சமிபகாலமாய் பிரபல  தனியார்  தொலைகாட்சியின்  தினசரி  நாடகங்களை  பார்க்க  நேர்ந்தது.  ஆஹா  என்ன  அருமையான  கதைகள்  வசனங்கள் . காலையில்  ஒரு  ஐந்து  நாடங்கள்,  மாலையில்  ஒரு  ஐந்து  நடகங்கள்.  இந்த  நாடங்களில்  வரும்  பெருபாலான  நாயகி  அல்லது   நாயகர்கள்  அவர்களுடன்  திருமணமானவர்களுடன்  வாழாமல்  இன்னொறுவருடன்  வாழ்கிறார்கள்.  அடுத்தவன்  மனைவியை  எப்படி  வசியம்  செய்து  அடைவது  என்று  துடிக்கும்  ஆண்,  அடுத்தவன்  கணவனை   அவன்  சொத்துக்காக  அவன்  மனைவியிடம்  இருந்து  பிரிக்க  நினைக்கும்  பெண்  என்று  நாடக  தயாரிப்பாளர்  எப்படி  தான்  கதாபத்திரங்களை   படைக்கிறார்களோ.  ஒரு  நாடகத்தில்  கணவன்  தன்  மனைவி  கற்பமாக  இருப்பதை  கொண்டாட   அவன்  மனைவிக்கு  இனிப்பு  வழங்குகிறான்,  ஆனால்  மனைவியோ  குடும்பத்தினர்  முன்னிலையில்  மருத்துவரிடம்  எனக்கு  DNA TEST  எடுக்கனும்,  யார்  குழந்தைக்கு   அப்பானு  தெரியனும்  என்கிறாள். அதே  நடகத்தில்  தன்  குடும்பத்தை  எப்படி  அழித்து,  அவர்களை  அடக்கி  தன்  வழியில்  கொண்டுவருவது  என்று  சதா நேரமும்  யோசிக்கும்  அண்ணி.  அதே  போன்று  தன்  மருமகளை  பிடிக்காததால்   அவளை  தன்  மகனிடம்  இருந்து  பிரித்து,  இன்னொறுவன்  மனைவியை  அவள்  கணவனிடம்  இருந்து  பிரித்து  (  இதற்கு  அந்த  பெண்ணின்  தாயும்  உடந்தை)  தன்  மகனுக்கு  கட்டி  வைக்க  போராடும்  தாய். மனைவியை  வீட்டில்  விட்டு விட்டு,  முதலாளியுடன்  காதல்  வசனங்கள்  பேசிகிறான்  ( நாங்க  கூட  இவளோ  ரொமாண்டிக்கா  பேசுனதில்ல). சில  நேரங்களில்  ஆபாசங்களும்  நிகளும்.  எத்தனை  வக்கிரம், கெட்ட  எண்ணம்,  துரோகம்,  காமம் (காதல்  என்ற  பெயரில்).  இன்னும்  ஏகப்பட்டது  இருக்கிறது.  இதை  பார்த்தால்  நம்  கலாச்சாரம்  (  எல்லாரும்  இப்ப  கலாச்சாரம்  சீரழியுதுனு  சொல்ராங்க,  அதான் நானும்  சொன்னே மத்தபடி  எனக்கு  கலாச்சாரம்னா  என்னனு  தெரியாது) என்னாகும்?  ரொம்ப  வேணாம்  ஒரு  வாரம்  இந்த  நாடகங்களை  பாருங்கள்,  அடுத்தவர்  குடும்பத்தை  எப்படி  அழிப்பது,  அடுத்தவன் …..  என்று  எல்லா  கலைகளையும்  மன்னிக்கவும்  கருமங்களையும்  தெரிந்து   கொள்வீற்கள்.   சினிமா  படங்களின்  ஸ்டில்களையும்  டிரைலர்களையும்  பார்த்துவிட்டு,  இது  எங்க  சமுதாய  மக்களின்  மனம்  புண்படுவதாக  உள்ளது,  அதனால்  இந்த   படத்தை   வெளியுட  கூடாது”,     இது  எங்க  மதத்தினரின்   மனம்  புண்படுவதாக  உள்ளது,  அதனால்  இந்த   படத்தை   வெளியுட  கூடாது  என்று  கோர்ட்டில்  வழக்கு  (  ஏற்கனவே  பல  லட்சம்  வழக்கு  தீக்காம   கடக்கு )  போடும்  எனதருமை  மக்கள்  நலவிரும்பிகளே,  இந்த  நாடகங்களை    சாதிமத  பேதமின்றி   அணைத்து  தரப்பினரும்  பார்க்கின்றனர்.  இந்த  நாடகங்களை  தடுக்க   நீங்கள்  ஏதாவது  பன்னலாமே.   என்ன   வழக்கு  போட்டாலும்   கருத்து  சுதந்திரம்  என்று  முடித்து  விடுகின்றனர்.    இதத்தான்  ஷேக்ஸ்பியர்    வாழ்க்கை  என்பது  ஒரு  நாடக  மேடை,  அதில்  நாம்  எல்லாம்  நடிகர்கள்  என்றாறோ??????????????      

லோக்சபா தேர்தலுக்கு பின் நம் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி மாறினால் அதற்கு அவர்கள் கூறும் நயமான நியாங்கள்…………….

லோக்சபா தேர்தலுக்கு  பின்  நம்  அரசியல்  கட்சி  தலைவர்கள்  கூட்டணி  மாறினால்  அதற்கு  அவர்கள்  கூறும்   நயமான  நியாங்கள்…………….

கருணாநிதி  {திமுக} :    காங்கிரஸ்  நாட்டை  தன்  குடும்பத்துக்காக  கூறுப்போட்டு  விற்றுவிட்டது.  எனக்கும் சரி,  திமுக வுக்கும் சரி  குடும்ப  அரசியல்  அறவே  பிடிக்காது  ( என்ன  சிரிப்பு  வேண்டிக்கடக்குது  இப்ப )  அதனால்  குடும்பமே  இல்லாத  மோடிக்கு  எங்கள்  ஆதரவினை  தருகிறோம்

மருத்துவர்  ராமதாஸ் {பாமக} :      5 நாட்களுக்கு  முன்னாள் :      திராவிட  கட்சிகளுடன்  இனி  ஒருபோது  கூட்டணி  கிடையாது
                                                  நேற்று :     தேசிய  கட்சிகளுடன்  இனி  ஒருபோது கூட்டணி  கிடையாது
                                                  5  நொடிகளுக்கு  முன்னாள்  :   நாட்டின்  வளர்ச்சிக்கு  மதசார்பும்  பிரிவினையும்    கூடவே கூடாது  அதனால்  எங்கள்  அதரவினை  காங்கிரஸ்க்கு  தருகிறோம்  

ஜெ., {ஆஇஆதிமுக}  :      அதிமுக  ஒரு  முற்போக்கு  கட்சி.  நமக்கு  மதம்  என்பது  இல்லை.  மதம்  சார்ந்த  கட்சிகளை  நாம்  ஆதரிக்க  கூடாது.  அதனால்   எங்கள்  ஆதரவினை  காங்கிரஸ்க்கு  தருகிறோம்     
                      (அப்ப  ஏன்  ரங்கநாதர்  கோவில்  சொர்க்கவாசல்  திறப்புக்கு  விடியகாலைலயே  போறிங்கனு  கேட்டக் கூடாது.  செய்வீற்களா????)

விஜயகாந்த் {தேமுதிக}  :  காலை 10.10 :  மக்களே  தெய்வத்துடன்  மட்டுமே  கூட்டணி
                                       மதியம்  1.53  :  மக்களே  மக்களுடன்  மட்டுமே  கூட்டணி 
                                       மாலை  5.35  :   மக்களே,  நான்  இலங்கை  மீனவர்கள்  தாக்கப்படுவதை  கண்டித்து  (  நோட்   பன்னுங்க  இலங்கை  மீனவர்கலாம்)  டில்லில  போராட்டம்  பன்ன  போய்ருந்தேன் .  அப்போ  எதர்ச்சியா   நம்ம  ராகுல்  தம்பிய   பார்த்தேன்.  வந்த  விசயத்த   சொன்னே .  உடனே  அவரு   நாம  ரெண்டு  பேரும்  மத்தில  ஆட்சிய  புடிச்சா   இலங்கை  மீனவர்கள்  பிரச்சனை  மட்டும்  இல்ல   இங்கிலாந்து   மீனவர்கள்  பிரச்சனையக்கூட   தீர்த்திரலாம்னு   சொன்னாரு   நான்  சரினு  சொல்டேன்  மக்களே.  ஆனா  ஒன்னு  மக்களே  தெய்வத்துடனும் ,  மக்களுடன்  மட்டுமே   கூட்டணி  மக்களே  

Wednesday 16 April 2014

நவீன நிக்காஹ


             
 நவீன நிக்காஹ்

முக்கியமான விசயம் பேசனும்னு சொன்ன?”
நில்லுங்க ஆட்டோ கோயில தாண்டட்டும்
கோயில் வாசலில் ஷேர்ஆட்டோவில் இருந்த அணைவரும் இறங்கினர் இவர்கள் இருவரை தவிர.
        ம்ம் இப்ப சொல்லு
நேத்து நம்ம உங்க ப்ரண்ட் கல்யாணத்துக்கு போனத எங்கமாமி பார்த்துட்டு எங்க அத்தாட்ட சொல்லிற்காங்க. ஆனா வீட்ல இதபத்தி எதுவும் கேக்கலஎனக்கே என் தங்கச்சி நஸ்ரின் தான் சொன்ன. நேத்துல இருந்து என் அத்தாவும்  அம்மாவும் என்னோட முகம் கொடுத்து பேசுறதுஇல்ல
         நீ ஒன்னும் மனச போட்டு கொலப்பிக்காத
அவுங்க ஏதாவது பேசுனாலும் பரவாயில்ல.  என்ன முடிவு எடுப்பாங்கனு யூகிக்கமுடியும்பேசாம இருக்குறது தான் எனக்கு பயமா இருக்கு.  இப்ப நான் வீட்டுக்கு போன உடனே இனி மேல் நீ வேலைக்கு போகாத வீட்டுலையே இருனு சொன்னாலும் சொல்லுவாங்க . நாம தாமதிக்காம ஒரு முடிவுக்கு வரனும்” 
“  புரிஞ்சுக்கமா. எனக்கு போஸ்டிங் கிடைக்க இன்னும் ஆறுமாசம் ஆகும்.  அது வர பொறுத்துக்கோ” 
அதுனால என்ன எனக்கு தான் வேலை இருக்குலஎன் சம்பாத்தியத்துல நாம வாழ முடியாதா?
இடையில் ஆட்டோவை வழிமறித்து ஒரு பெண் ஏறினார்
என்னமா யாஸ்மின். அத்தா எப்டி இருக்காரு?  எப்ப ரிடைர் ஆகுறார். ?
ம்ம் நல்லா இருக்காருஅடுத்த வருஷம் ரிடைர் ஆகுறார் 
நீ என்ன பன்ற” 
                நா அக்ரிகல்சர் ஆபிஸ்ல மேனேஜரா இருக்கேன்
                  நல்லதுமா
                  தம்பி அந்த பெரிய கடைக்கிட்ட நிறுத்துப்பா இறங்கிக்கிறேன்
சிறிது அமைதி நிலவியது.
என்ன யோசனஉங்க தன்மானம் தடுக்குதா?
இல்லமாஇதுக்கு ப்ராடிகலா யோசிக்கனும். நான் வேணா உங்க அப்பாட்ட பேசுறேன்
அதெல்லாம் வேலைக்கு ஆகாதுஎங்க சின்னஅத்தா பொண்ணு இப்டி பன்னதுக்கு என்ன பன்னாங்கனு சொல்லிற்கேன்ல
                சரி நா காலைல போன் பன்றேன்
போன்னாநாம என்ன போன்லைய காதலிச்சோம். என்ட நேரா சொல்லுங்க கிருஷ்ணா
கொஞ்சம் டைம் கொடு யாஸ்மி             
சரி சீக்கிரம் சொல்லுங்க. நா வரேன்
அண்ணா. தண்ணி தொட்டிகிட்ட நிறுத்துங்க
               நீ போ நா காசு கொடுத்துக்குறேன்
               வேணா யார் கொடுத்தா என்ன  என்று அவனை பார்த்த படியே படுதாவில் உள்ள முகதிரையை மூடிக்கொண்டுசென்றாள். சிறிது நேரம் அந்த பார்வையில் உரைந்து கிடந்தான்.
        தம்பி நீங்க
                 சிக்னல் பக்கத்துல நிறுத்துங்க
மறுநாள் காலை கிருஷ்ணா,  யாஸ்மினுக்கு போன் செய்தான்.
        ம்ம் சொல்லுங்க
இப்ப எங்க இருக்ககிளம்பிட்டியா?
                இப்ப கிளம்பிடுவேன்
வீட்லயே இருஉங்க அப்பா எங்க?
அத்தா வீட்டுல தான் இருக்காருஏங்க என்ன விசயம்
               பத்து நிமிஷத்துல நான் உங்க வீட்டுக்கு வறேன்
               என்ன சொல்ரீங்க
        நீ வை நா வரேன்
ஹலோ …….   ஹலோ……?
அவளுக்கு ஏதோ புரிந்துவிட்டது. நடுஹாலில் அமர்ந்திருந்த அத்தாவிடம், “அத்தா கிளம்பிட்டிங்களா?”
ஆமா ஏம்மா?”
பத்து நிமிஷம் இருங்கப்பா.”  என்று தன் அறைக்குள் சென்று விட்டாள்.
கிருஷ்ணா, முகமது ரஹிம் இல்லத்தை அடைந்தான். வாசலில்உள்ளகம்பிகேட்டைதட்டினான். அமர்ந்திருந்த அவர் கதவை திறந்து பார்த்தார். கிருஷ்ணாவை பார்த்தவுடன் அவருக்கு தெரிந்துவிட்டது. அரைகுறை மனதுடன், குழப்பமான குரலில், “வாங்கஎன்றார்.
நடுஹாலில் போடபட்டிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தனர்.
         என்ன விசயம்”  என எதுவும் தெரியாதவர் போலகாட்டிகொண்டார்.
சார் நான் எதுக்கு வந்துருக்கேன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்தெரியலனா நானே சொல்றேன். என் பெயர் கிருஷ்ணா. நான் ஒரு அணாத.  நம்ம ஏரியா ஹோம்ல தான் வளந்தேன். டிகிரி முடிச்சு ரயில்வே எக்சாம் எழுதி பாஸ் ஆகிட்டேன். இன்னும் ஆறுமாசத்துல எனக்கு போஸ்டிங் கிடைச்சிரும்.  நானும் உங்க பொண்ணும் மூனு வருஷமா காதலிக்கிறோம். எனக்குனு யாரும் கிடையாது.  அதனால உங்க சம்மதத்தோடயும், ஆசிவாதத்தோடயும் கல்யாணம் பன்னிக்கலாம்னு ஆசைபடுறோம்
அவன் கூறி முடிப்பதற்குள், “எனக்கு விருப்பம் இல்ல.  நீங்க கிளம்பலாம்
யாஸ்மினும், அவள் அம்மாவும் அங்கு வந்தனர்.
“இவர கிளம்ப சொல்லுமாஎன்று ம்னைவியிடம் கூறியவாரு வேகமாக மாடிப்படியில் ஏறினார்.
“தயவு பன்னி கிளம்புபா. எங்களுக்கு இதெல்லாம் ஒத்துவராது.
                சார் உங்கள்ட நான் பேசனும் .கொஞ்சம் நில்லுங்க
அத்தா எங்க விருப்பத்ததான அவர் சொன்னாரு. இதுல என்ன தப்பு
அவர் நின்று ,அவளை திரும்பிபார்த்தார்.
       “யாஸ்மி பேசாம இருடி “
“இப்ப நான் பேசலனா கடைசி வரைக்கும் இந்த கறுப்பு துணிக்குள்ளயே காலந்தள்ள வேண்டியதுதான். உங்க கடமை எனக்கு நல்ல படியா நிக்காஹ் பன்னிவைக்கிறதுனு நினைக்கிறீங்க. ஆனா கடமைய தாண்டி எனக்குனு ஆசை, விருப்பம், சுதந்திரம் இருக்கு. என்ன மாஸ்டர் டிகிரி படிக்கவச்சது, மொகத மறைச்சுக்கிட்டு வாழதானா?
யாஸ்மி நீ இரு நா பேசுறேன்………… சார் உங்கள்ட தப்பா எதுவும் கேட்களையே. உங்க பொண்ண முறையா வந்து கேட்கிறேன். நகை போடுங்க,  வண்டி தாங்கனு கேட்கள. ஏன்னா என்ட கை கால் இருக்கு. உங்க ஆசிவாதம் மட்டும் போதும்
தம்பி ஜமாத்ல இவருக்குனு ஒரு நல்ல பெயர் இருக்கு. அத கெடுக்காதிங்க தம்பி. இத்தன வருசமா இவரு சம்பாதிச்சதவச்சு தான் இவளுக்கு நல்ல படியா நிக்காஹ் பன்னனும்
அம்மா எனக்கு எதுக்குமா நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்சது. அது உங்களுக்கு தான் சேரனும். எனக்கு நல்ல படிப்பும்,  பண்பும் கொடுத்துறுக்கிங்க. அதவிட பெரியசொத்து இல்ல. இன்னும் எத்தன வருஷம் தான் பெத்தவுங்களே பிள்ளைகளுக்கு நிக்காஹ் பன்னி வைப்பிங்க. எங்க சம்பாத்தியதுலையே நாங்க நிக்காஹ் பன்னிக்கிறோம்
                 எனக்கும் உங்க அப்பாவுக்கும் இதுல இஷ்டம் இல்ல. எங்கயாவது ஓடிப் போய்டுங்க
நாங்க ஏங்க ஓடனும். உங்க வீட்டுக்கு எதிர்த்த காம்போண்ட்ல தான் வீடு பார்த்துருக்கேன். நாளைக்கே அங்க குடிப்போய்டுவோம். எனக்கு போஸ்டிங் கிடைச்சு, அவளுக்கும் ப்ரொமோஷன் கிடைச்சப்புறம் நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்குவோம்………… என்ன யாஸ்மி உனக்கு சம்மதமா?
                     சம்மதங்க
ஏன்டி உனக்கு வெக்கமா இல்ல?ஒரு பையனோட தனியா இருந்தா இந்த ஊரு கேவலமா பேசாது?
என்னது ஊரா. ஒரு மாசம் இதப்பத்தி பேசுமா. அதுக்கப்புறம்?வாய் இருக்குறவனெல்லாம் பேசலாம்மா. ஆனா யாரு வாழ்ந்துகாட்றாங்கனு தான் முக்கியம்.
                      நாலு பேரு கேட்டா என்ன சொல்லுவேன்
                     ம்ம் என் பொண்ணு அவ விருப்பத்தோட, சொந்தகால்ல, பெத்தவுங்க உழைச்சத பிடிங்கிட்டு போகாம, சேர்ந்து வாழனும்னு நினைச்சவனோட வாழ்ரானு சொல்லு
                      என்னங்க எதாவது பேசுங்க. இப்டி கல்லா நிக்காதிங்க
                        நிக்காஹ் பன்னாம ஒரு பொண்ணு ஒரு ஆம்பளையோட வாழ்றதுக்கு பெயரு என்ன தெரியுமா
                       சத்தியமா விபச்சாரம் இல்ல அத்தா