Wednesday 16 April 2014

நவீன நிக்காஹ


             
 நவீன நிக்காஹ்

முக்கியமான விசயம் பேசனும்னு சொன்ன?”
நில்லுங்க ஆட்டோ கோயில தாண்டட்டும்
கோயில் வாசலில் ஷேர்ஆட்டோவில் இருந்த அணைவரும் இறங்கினர் இவர்கள் இருவரை தவிர.
        ம்ம் இப்ப சொல்லு
நேத்து நம்ம உங்க ப்ரண்ட் கல்யாணத்துக்கு போனத எங்கமாமி பார்த்துட்டு எங்க அத்தாட்ட சொல்லிற்காங்க. ஆனா வீட்ல இதபத்தி எதுவும் கேக்கலஎனக்கே என் தங்கச்சி நஸ்ரின் தான் சொன்ன. நேத்துல இருந்து என் அத்தாவும்  அம்மாவும் என்னோட முகம் கொடுத்து பேசுறதுஇல்ல
         நீ ஒன்னும் மனச போட்டு கொலப்பிக்காத
அவுங்க ஏதாவது பேசுனாலும் பரவாயில்ல.  என்ன முடிவு எடுப்பாங்கனு யூகிக்கமுடியும்பேசாம இருக்குறது தான் எனக்கு பயமா இருக்கு.  இப்ப நான் வீட்டுக்கு போன உடனே இனி மேல் நீ வேலைக்கு போகாத வீட்டுலையே இருனு சொன்னாலும் சொல்லுவாங்க . நாம தாமதிக்காம ஒரு முடிவுக்கு வரனும்” 
“  புரிஞ்சுக்கமா. எனக்கு போஸ்டிங் கிடைக்க இன்னும் ஆறுமாசம் ஆகும்.  அது வர பொறுத்துக்கோ” 
அதுனால என்ன எனக்கு தான் வேலை இருக்குலஎன் சம்பாத்தியத்துல நாம வாழ முடியாதா?
இடையில் ஆட்டோவை வழிமறித்து ஒரு பெண் ஏறினார்
என்னமா யாஸ்மின். அத்தா எப்டி இருக்காரு?  எப்ப ரிடைர் ஆகுறார். ?
ம்ம் நல்லா இருக்காருஅடுத்த வருஷம் ரிடைர் ஆகுறார் 
நீ என்ன பன்ற” 
                நா அக்ரிகல்சர் ஆபிஸ்ல மேனேஜரா இருக்கேன்
                  நல்லதுமா
                  தம்பி அந்த பெரிய கடைக்கிட்ட நிறுத்துப்பா இறங்கிக்கிறேன்
சிறிது அமைதி நிலவியது.
என்ன யோசனஉங்க தன்மானம் தடுக்குதா?
இல்லமாஇதுக்கு ப்ராடிகலா யோசிக்கனும். நான் வேணா உங்க அப்பாட்ட பேசுறேன்
அதெல்லாம் வேலைக்கு ஆகாதுஎங்க சின்னஅத்தா பொண்ணு இப்டி பன்னதுக்கு என்ன பன்னாங்கனு சொல்லிற்கேன்ல
                சரி நா காலைல போன் பன்றேன்
போன்னாநாம என்ன போன்லைய காதலிச்சோம். என்ட நேரா சொல்லுங்க கிருஷ்ணா
கொஞ்சம் டைம் கொடு யாஸ்மி             
சரி சீக்கிரம் சொல்லுங்க. நா வரேன்
அண்ணா. தண்ணி தொட்டிகிட்ட நிறுத்துங்க
               நீ போ நா காசு கொடுத்துக்குறேன்
               வேணா யார் கொடுத்தா என்ன  என்று அவனை பார்த்த படியே படுதாவில் உள்ள முகதிரையை மூடிக்கொண்டுசென்றாள். சிறிது நேரம் அந்த பார்வையில் உரைந்து கிடந்தான்.
        தம்பி நீங்க
                 சிக்னல் பக்கத்துல நிறுத்துங்க
மறுநாள் காலை கிருஷ்ணா,  யாஸ்மினுக்கு போன் செய்தான்.
        ம்ம் சொல்லுங்க
இப்ப எங்க இருக்ககிளம்பிட்டியா?
                இப்ப கிளம்பிடுவேன்
வீட்லயே இருஉங்க அப்பா எங்க?
அத்தா வீட்டுல தான் இருக்காருஏங்க என்ன விசயம்
               பத்து நிமிஷத்துல நான் உங்க வீட்டுக்கு வறேன்
               என்ன சொல்ரீங்க
        நீ வை நா வரேன்
ஹலோ …….   ஹலோ……?
அவளுக்கு ஏதோ புரிந்துவிட்டது. நடுஹாலில் அமர்ந்திருந்த அத்தாவிடம், “அத்தா கிளம்பிட்டிங்களா?”
ஆமா ஏம்மா?”
பத்து நிமிஷம் இருங்கப்பா.”  என்று தன் அறைக்குள் சென்று விட்டாள்.
கிருஷ்ணா, முகமது ரஹிம் இல்லத்தை அடைந்தான். வாசலில்உள்ளகம்பிகேட்டைதட்டினான். அமர்ந்திருந்த அவர் கதவை திறந்து பார்த்தார். கிருஷ்ணாவை பார்த்தவுடன் அவருக்கு தெரிந்துவிட்டது. அரைகுறை மனதுடன், குழப்பமான குரலில், “வாங்கஎன்றார்.
நடுஹாலில் போடபட்டிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தனர்.
         என்ன விசயம்”  என எதுவும் தெரியாதவர் போலகாட்டிகொண்டார்.
சார் நான் எதுக்கு வந்துருக்கேன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்தெரியலனா நானே சொல்றேன். என் பெயர் கிருஷ்ணா. நான் ஒரு அணாத.  நம்ம ஏரியா ஹோம்ல தான் வளந்தேன். டிகிரி முடிச்சு ரயில்வே எக்சாம் எழுதி பாஸ் ஆகிட்டேன். இன்னும் ஆறுமாசத்துல எனக்கு போஸ்டிங் கிடைச்சிரும்.  நானும் உங்க பொண்ணும் மூனு வருஷமா காதலிக்கிறோம். எனக்குனு யாரும் கிடையாது.  அதனால உங்க சம்மதத்தோடயும், ஆசிவாதத்தோடயும் கல்யாணம் பன்னிக்கலாம்னு ஆசைபடுறோம்
அவன் கூறி முடிப்பதற்குள், “எனக்கு விருப்பம் இல்ல.  நீங்க கிளம்பலாம்
யாஸ்மினும், அவள் அம்மாவும் அங்கு வந்தனர்.
“இவர கிளம்ப சொல்லுமாஎன்று ம்னைவியிடம் கூறியவாரு வேகமாக மாடிப்படியில் ஏறினார்.
“தயவு பன்னி கிளம்புபா. எங்களுக்கு இதெல்லாம் ஒத்துவராது.
                சார் உங்கள்ட நான் பேசனும் .கொஞ்சம் நில்லுங்க
அத்தா எங்க விருப்பத்ததான அவர் சொன்னாரு. இதுல என்ன தப்பு
அவர் நின்று ,அவளை திரும்பிபார்த்தார்.
       “யாஸ்மி பேசாம இருடி “
“இப்ப நான் பேசலனா கடைசி வரைக்கும் இந்த கறுப்பு துணிக்குள்ளயே காலந்தள்ள வேண்டியதுதான். உங்க கடமை எனக்கு நல்ல படியா நிக்காஹ் பன்னிவைக்கிறதுனு நினைக்கிறீங்க. ஆனா கடமைய தாண்டி எனக்குனு ஆசை, விருப்பம், சுதந்திரம் இருக்கு. என்ன மாஸ்டர் டிகிரி படிக்கவச்சது, மொகத மறைச்சுக்கிட்டு வாழதானா?
யாஸ்மி நீ இரு நா பேசுறேன்………… சார் உங்கள்ட தப்பா எதுவும் கேட்களையே. உங்க பொண்ண முறையா வந்து கேட்கிறேன். நகை போடுங்க,  வண்டி தாங்கனு கேட்கள. ஏன்னா என்ட கை கால் இருக்கு. உங்க ஆசிவாதம் மட்டும் போதும்
தம்பி ஜமாத்ல இவருக்குனு ஒரு நல்ல பெயர் இருக்கு. அத கெடுக்காதிங்க தம்பி. இத்தன வருசமா இவரு சம்பாதிச்சதவச்சு தான் இவளுக்கு நல்ல படியா நிக்காஹ் பன்னனும்
அம்மா எனக்கு எதுக்குமா நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்சது. அது உங்களுக்கு தான் சேரனும். எனக்கு நல்ல படிப்பும்,  பண்பும் கொடுத்துறுக்கிங்க. அதவிட பெரியசொத்து இல்ல. இன்னும் எத்தன வருஷம் தான் பெத்தவுங்களே பிள்ளைகளுக்கு நிக்காஹ் பன்னி வைப்பிங்க. எங்க சம்பாத்தியதுலையே நாங்க நிக்காஹ் பன்னிக்கிறோம்
                 எனக்கும் உங்க அப்பாவுக்கும் இதுல இஷ்டம் இல்ல. எங்கயாவது ஓடிப் போய்டுங்க
நாங்க ஏங்க ஓடனும். உங்க வீட்டுக்கு எதிர்த்த காம்போண்ட்ல தான் வீடு பார்த்துருக்கேன். நாளைக்கே அங்க குடிப்போய்டுவோம். எனக்கு போஸ்டிங் கிடைச்சு, அவளுக்கும் ப்ரொமோஷன் கிடைச்சப்புறம் நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்குவோம்………… என்ன யாஸ்மி உனக்கு சம்மதமா?
                     சம்மதங்க
ஏன்டி உனக்கு வெக்கமா இல்ல?ஒரு பையனோட தனியா இருந்தா இந்த ஊரு கேவலமா பேசாது?
என்னது ஊரா. ஒரு மாசம் இதப்பத்தி பேசுமா. அதுக்கப்புறம்?வாய் இருக்குறவனெல்லாம் பேசலாம்மா. ஆனா யாரு வாழ்ந்துகாட்றாங்கனு தான் முக்கியம்.
                      நாலு பேரு கேட்டா என்ன சொல்லுவேன்
                     ம்ம் என் பொண்ணு அவ விருப்பத்தோட, சொந்தகால்ல, பெத்தவுங்க உழைச்சத பிடிங்கிட்டு போகாம, சேர்ந்து வாழனும்னு நினைச்சவனோட வாழ்ரானு சொல்லு
                      என்னங்க எதாவது பேசுங்க. இப்டி கல்லா நிக்காதிங்க
                        நிக்காஹ் பன்னாம ஒரு பொண்ணு ஒரு ஆம்பளையோட வாழ்றதுக்கு பெயரு என்ன தெரியுமா
                       சத்தியமா விபச்சாரம் இல்ல அத்தா

No comments:

Post a Comment