Sunday, 26 January 2014

அமைதிக்கு பின்னால் புயல்


                   அமைதிக்கு பின்னால் புயல்
              
                     வாசல்  அருகில் காலணிகள் நிறைய கடந்தன். அதை பார்த்தவுடன் அவள் உள்ளே என்ன நடக்கிறது என்று யூகித்துவிட்டாள். கோபத்துடன் உள்ளே நுழைந்தாள். பத்து பதிணைந்து பெண்கள், ஏழெட்டு ஆண்கள் தாம்புல பாத்திரங்களை சுற்றி அமர்ந்திருந்தனர். அவள் யாரயும் ஏரெடுத்துக் கூட பார்க்காமல் சமையல் அறைக்கு சென்றாள்.
              என்னக்கா  பொண்ணு தல முடிய பாதி முதுகு வர தான் வச்சுருக்கா?  கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியெல்லாம் வெட்டக் கூடாதுனு சொல்லிடுங்க. நம்ம குடும்பத்துல யாரும் இப்புடி வெட்டிக்க மாட்டாங்க
                சிக்கிரம் டிரஸ்ச மாத்திட்டு வந்தவுங்களுக்கு இந்த காபிய குடு
                 உங்கள்ட பேசி எந்த பலனும் இல்ல. நானே பாத்துக்குறேன். எதுவும் பேசாத. மாப்பிள்ள வீடு பணக்காரங்க. தரகர் தேடி பிடிச்சு  கூட்டிட்டு வந்திருக்காறு. வரதட்சனையும் ரொம்ப கேக்க மாட்டாங்க
            எதுவும் பேசாமல் காபி தட்டை எடுத்துக் கொண்டு நடு அறைக்கு சென்றாள்.
           என்னோட பொண்ண நல்லபடியா பாத்துப்பிங்கனு நம்பிக்கை இருக்கு. என்ன வேணும்னாலும் கேளுங்க என்னால முடிஞ்ச வர செய்யிறேன்
            நாங்க என்ன பெருசா கேக்க போறோம். உங்க பொண்ணுக்கு எழுபதோ, எம்பதோ போடுங்க. உங்க மாப்பிள்ளைக்கி எதொவொரு பைக்கு வாங்கித்தாங்க. அவ்வளவு தான் என்ன புரொக்கரே நா சொன்னது சரி தான?”
              மாப்பிள்ள அப்பா கேட்டத நீங்க செஞ்சுறுவிங்க. அத பத்தி கவல இல்ல. மாப்பிள்ளை இப்ப சென்ணைல வேலபாத்துட்டு இருக்காரு. கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணும் மாப்பிள்ளையும் தங்குற மாதிரி நல்ல வீடா அங்கையே புடிச்சு கொடுத்த மாப்பிள்ள சந்தோஷபடுவார்.”
   அரைமனதுடன் தலையை ஆட்டினார்.
          என்னமா அங்கயே நிக்கிற வந்தவுங்களுக்கு காபி குடு
                       காபி கொடுத்து விட்டு தூணுக்கு அருகில் போய் நின்றாள்.
          என்ன மாப்பிள்ள உங்களுக்கு என் பொண்ண புடிச்சுருக்கா?”
                         அப்பா ஒரு நிமிஷம். நான் அவர்ட பேசனும்.”
                            என்ன சம்பந்தி இது. உங்க பொண்ணு இல்லாத ஒரு பழக்கத்த சொல்லுது. மாப்பிள்ள வீட்டுகாரவுங்க முன்னாடி பொண்ணு வாய தொறந்து பேசலாமா?.....   காபி கொடுத்தவுடனே எங்க கால்ல விழுகனும். அத செய்ய சொல்லுங்க முதல
                   உங்க கால்ல விழ வேண்டிய அவசியம் எனக்கில்ல. வரவுங்க போறவுங்க கால்ல எல்லாம் என்னால விழமுடியாது
                    என்னமா இப்பிடி பேசுற. நீ இப்பிடி பேசுனதுக்கு அவுங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளு
                     முடியாதுப்பா
                      என்ன சம்பந்தி பொண்ண நல்லா தான் வளத்துருக்கிங்க. எப்பிடி பேசனும்னு தெரியவேன?”
                     ஹலோ சார். எங்க அப்பா என்ன நல்லாதான் வளர்த்திருக்கார். நீங்க தான் மத்தவுங்க உழைப்ப திருட பாக்குறிங்க. எங்கப்பா இத்தன வருசமா வாத்தியாறா வேல பாத்து சேத்த காச எல்லாம் வரதட்சனையா கேட்டு பிச்ச எடுக்குறிங்க. ஏன் கல்யாணம் பன்றவனுக்கு பொண்டாட்டி வச்சு சோறு போட வக்கில்லையா. எங்கப்பாவே நகையப் போட்டு, ஓட்ட வண்டி வாங்கிக் கொடுத்து, தங்க வீடு வேற குடுக்கனுமாம். என் கூட படுத்து பிள்ள பெக்கவும் ஆள் அனுப்பனுமா? இல்ல இதயாவது உங்க பிள்ள செய்வாரா?”
                      ஏய் மரியாதையா பேசு இல்ல நடக்குறதே வேற
                      உங்களுக்கெல்லாம் என்னட மரியாத. உன் பிள்ளைக்கு பகல் எல்லாம் அடிமை வேல பாக்கவும். ராத்திரி உன் பிள்ள காட்ற வித்தைய வேடிக்க பாக்கவுமா நா ஜர்னலிஸம் படிச்சேன் 
           இன்னு என்ன உக்காந்திருக்கிங்க வாங்க போகலாம். பொண்ணு வளத்துருக்கானாம்  லெட்சணமா
                                ஏன்டி இப்பிடி அசிங்கமா நடந்துக்குற. உனக்கு அறிவில்ல. எவனயாவது காதலிச்சு தொலைக்கிரையா. சொல்லித்தொல
                            இந்த மாப்பிள்ள வேண்டாம்னு சொன்னவுடனே காதலிக்கிறயானு கேக்குறிங்க. என் ப்ரெண்ட் காதலிச்சுதான் கல்யாணம் பன்னா இப்ப எல்லா பொண்ணுங்க மாதிரி அவளும் அடுப்படியிலயே அடப்பட்டு கெடக்கா. காதலிச்சு கல்யாணம் பன்னாலும் பெத்தவுங்க கல்யாணம் பன்னிவச்சாலும் தாழி கட்டுன பின்னாடி எல்லாம் ஒரே மாதிரி தான். அவ மாமியா வீட்டுல அதுக்கு சீர் குடுங்க இதுக்கு சீர் குடுங்கனு அவ அப்பாவ தொந்தரவு பன்றாங்க. சாதிய சொல்லி அவள குத்திக்காட்ராங்க
                     அப்ப இப்டியே கல்யாணம் பன்னிக்காமயே இருக்க போரியா?”
                      நா இப்ப தான் ஒரு நியூஸ் சனல்ல சேர்ந்துருக்கேன். எனக்கு பர்கா டுட் மாதிரி பெரிய ஜர்னலிஸ்ட்டா ஆகனும். அதுக்கு அப்பறம் எனக்கு யாரயாவது புடிச்சதுன கல்யாணம் பன்னிக்கிறேன்
                       நீ எப்படியோ போ. ஆனா உனக்கடுத்து ஒரு பொண்ணு இருக்கா ஞாபகம் வச்சுக்க. உன்னால அவ கல்யாணமும் தடபடும்
                          நா இருக்குறது உங்களுக்கு பிரச்சனைனா நா வெளிய போய்டுறேன்.”
                           கண்டத படிச்சிட்டு இப்பிடி பேசிக்கிட்டு திரியுற. இனிமே நீ ரொம்ப கஷ்ட படுவ
                             கம்மியான வரதட்சன கேக்குறாங்கனு பள்ளிக் கூடத்துக்கு போற என் தங்கச்சிய யார்காவது கட்டிவச்சுறாதிங்க. உங்களால பாத்துக்க முடியலனா அவள என்ட அனுப்புங்க. நா பாத்துக்குறேன். நா போறேன். “
           அவ போறாங்க. அவள போக வேணாம்னு சொல்லுங்க.”                    

கனிமொழி


                                         கனிமொழி
            ஹலோ, சொல்லுடி
            இவ்ளோ  நேரமா  போன்  பன்றேன்  ஏன்  எடுகல???”
            இன்னைக்கு  எங்க  டிப்பாட்மண்ட்  ப்ரபஸர்ஸ்  மீட்டிங்.  அதான்  அடன்  பண்ண  முடியலடி.  என்ன  விசயம்  சொல்லு
             ஒன்னும்  இல்ல  இன்னைக்கு  காலேஜ்ல  க்ளாஸ்  சீக்கிரமா  விட்டாங்க,  உங்கள்ட  பேசனும்னு  தோணுச்சு  அதான்  கால்  பன்னேன்
               இப்ப  கொஞ்சம்  வேலையா  இருக்கேன்.  அப்புறம்  கால்  பன்றேண்
               ஆரம்பத்துல  தினம்  போன்  பன்னி  பேசிக்கிட்டே  இருப்பிங்க   இப்ப  நா  கால்   பன்னாக்கூட   எடுக்க   மாட்றிங்க.  ஒவ்வருதடவையும்  ஒரு  சாக்கு  சொல்றிங்க.  நீங்க  பழைய   மாறி  இல்ல.  இப்ப   என்ட  சரியாவே  பேசுறதுல்ல
                அப்டி  எல்லாம்  ஒண்ணும்  இல்ல  செல்லம்.  பத்து  வருசத்துக்கு  முன்னாடி  உன்ன  நம்   ஊர்   மந்தைல  பாத்ததுல   இருந்து   இப்ப   வர   உன்ட   பேசிக்கிட்டே   இருக்கனும்னு    தான்   தோணுது   புஜ்ஜிமா
                இதுக்கு   ஒன்னும்   கொறச்சல்  இல்ல.  இப்டி   பேசி   பேசியே   என்ன   கவுத்துட்டிங்க
                நீவேனா   பாரு  உன்  வாழ்க்க  புல்லா  உன்ட  கொஞ்சி கொஞ்சி  பேசிக்கிட்டே   இருப்பேன்
                “(சிரிப்பு)”
            என்டி  திடிர்னு   சிரிக்கிற?”
           ஒன்னுல்ல  போன   வருசம்  நம்ம   ஊர்   திருவிழால  பொண்ணுங்கல   வேடிக்க  பாத்ததுக்கு  என்ட  கொட்டு   வாங்குனிங்கல  அத  நனச்சேன் .  சிரிச்சேன்……..  வைங்க  வைங்க  அப்பா   கால்   பன்றார்.  நான்  அவர்ட   பேசிட்டு   கூப்டுறேன்  (பயத்துடன்)”
            ஹலோ   சொல்லுங்கப்பா
           என்னமா    போன்    பன்னா    பிசினு    வருது   யார்ட்ட    பேசிக்கிட்டு   இருந்த?”
           சித்தி   பேசுனாங்கப்பா
           சித்திட்ட   தான்   பேசினியா?    இல்ல   உன்    பின்னாடி    சுத்துறானே    அந்த   சக்லிய பயட்ட    பேசினியா?”
           இல்லப்பா   சித்திட்ட   தான்   பேசுனேன்
            இங்கபாரு   அந்த   பயக்கூட   பேசுறது   தெரிஞ்சிச்சு  அப்புறம்  நா   மனுசனாவே   இருக்க   மாட்டேன்.  உனக்கும்   நம்ம   சாதி   கட்சி   தலைவர்   பையனுக்கும்   அடுத்த   மாசம்   கல்யாணம்.   நாளைக்கி  உன்ன   பொண்ணு   பாக்க   வராங்க  ஞாபகம்   வச்சுக்கோ   போன  வை
            ம்ம்  சொல்லுடி   என்ன  சொன்னார்  என்   மாமனாரு?  மாப்பிள்ளையப்  பத்தி  விசாரிச்சாரா?”
             “(அழுகை)”
         என்னடி?    ஏன்டி  அழுற
          “(அழுகை)”
         அழுகாத   என்னனு  சொல்லு
         அடுத்த  மாசம்…………   எனக்கும்     எங்க   ஜாதிக்  கட்சி   தலைவர்    பையனுக்கும்    கல்யாணமாம்.   நாளைக்கி  என்ன   பொண்ணு  பாக்க   வராங்கலாம்.   எனக்கு   பயமா   இருக்குங்க.  நாம   எங்கயாவது     போயிருவோம்
          நீ  ஒன்னும்   பயபுடாத   நாம   என்ன   செய்ய    கூடாத   தப்பா   பண்டோம்.   ஓடி   ஒழியிறதுக்கு.    நா   நாளைக்கி   உங்க   வீட்டுக்கு   வந்து   உங்கப்பாட்ட  பேசுறேன்.  நீ    அழுகாம   இரு.  என்ட  படிப்பு  இருக்குது,  நல்ல  வேல   இருக்குது.  கண்டிப்பா   உங்க   அப்பா   நம்மல   எதுக்குவாறு
         நாளைக்கி   கண்டிப்பா   வந்துருங்க
         என்  உயிறே   போனாலும்   நா   வந்துற்றேன்.  சரி   வச்சிற்றேன்.   அதுக்கு   முன்னாடி   ஒரே   ஒரு   உம்மா   குடுடி
         எங்க
           எங்கயாவது.  உன்  இஷ்டம்
            சரி . உம்ம்ம்மா
           எங்கடி   குடுத்த
            அது   சொல்லமுடியாது.  நாளைக்கி   நேர்ல   சொல்றேன்
       சரி  சரி   நா   வச்சிர்றேன்
       
                  இன்னு   எத்தன   நாளுடி   இப்புடி   அழுதுக்கிட்டே    கடப்ப.   உன்ன   பொண்ணு   கேக்க    வந்த   அந்த   சக்கிலிய   பயல    வாசல்ல   வச்சே  உங்கப்பா    வெட்டி   கொன்னுப்புட்டாரு.   இப்ப   ரெண்டு   வருசமா    ஜெயில்ல   கடக்காரு.  என்   வயித்துத   பொறந்த   பாவத்துக்கு   இந்த   வாசல்லையே    கடந்து   அழுது   அழுது   சாகனும்னு   உன்   தல   விதி   அய்யோ அய்யோ…………”
                 எதுவும்   அவள்   காதில்   விழுவதில்லை.   கடைசியாக   அவன்   இறப்பதற்கு   முன்   தினம்   பேசியதை   நினைத்துக்  கொண்டே   வாசல்   கதவில்    சாய்ந்து   அவன்   இரத்தம்  படிந்த  படியை   பார்த்து    அழுதுக்  கொண்டே    இருந்தாள்   கனிமொழி.

நான் தொலைத்தவை

              நான் தொலைத்தவை


                        மங்கிய நிற கட்டடங்களுக்கு  நடுவில்  உள்ள  சைக்கிள்  நிறுத்தம்,  இரும்பு  ஜென்னல்கள்,  வெள்ளையில்  பச்சை  கோடு  போட்ட  சட்டை,  கரும்பச்சை நிற  கால்சட்டை ,  சிகப்பு  பட்டை  கயிற்றில்  கலுத்தில்  தொங்கும்  அடையாள அட்டை, “கடைசி  ரெண்டு  பென்சும்  உருப்படாத  கழுதைகஎன  வாங்கிய  பட்டம்,  டிபன்  பாக்சை  எடுத்து  வைத்து  கொண்டு  என்ன  மாப்ல  இன்னைக்கு  சாப்பாடு  கொண்டு  வரலையா????  என  கதறவிடும்  நண்பன்,  வாய்விட்டு  சிரித்த  வகுப்புகள்,  கெவலமாய் பெயிலான  காலாண்டு  மறுதேர்வு  ,  அடுத்த  முறையாவது  தேற  வேண்டும்  என  பேப்பரை  எல்லாம்  மாற்றி  அருகில்  உள்ளவனிடம்  பிட்டை  வாங்கி  எழுதி  வங்கிய   ஜெஷ்ட் பாஸ்” , இந்திராநகர்  பள்ளி  மைதானம்,   சனிக்கிழமையானால்  பிக்  சினிமா  கனேஷ்ல்  பார்த்த  ஹாலிவுட்  படங்கள்,  பிரேக்  இல்லாத  சைக்கிளில்  பந்தயம்,  பள்ளிக்கு முன்னால்  உள்ள  வேகதடை ,  சென்.ஜோசப் பெண்கள் பள்ளி  மாணவிகள்,  பழைய  குயவர்பாளையம்  சாலை,  சென். மேரிஸ்  சர்ச்,  தெற்குவாசல்  சிக்னல்,  மினாட்சி தியேட்டர்,  தெரு ஓர  சினிமா  போஸ்டர்,  மதுரைஇராமேஸ்வரம்  ரயில்வே  ட்ராக்,  கிருதுபால்  நதி  கால்வாய்,  பெல்  அடித்தவுடன்  விலகும்  பன்னிக் கூட்டம், சாக்கடையில்  முங்கி கடந்தாலும்  அழகாய்  திரியும்  வெள்ளை  பன்னிக் குட்டி  என  இன்னும்  எத்தனை  உறவுகள்  இறந்தகாலம்  என்னும்  எதார்த்த்தில்  குடியேறிவிட்டன.