Monday, 3 November 2014

சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)


சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)


கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல்

கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை. மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள்.

என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபடல்களும் மறதியும் இயல்பாகவே இருக்க கூடும்.

இந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள் தமிழில் வெளியாகி உள்ளன. இவை ஆங்கிலத்தில் ஒரே தொகுப்பாக வெளியாகி உலக இலக்கிய பரப்பில் கவனம் பெற வேண்டும் என்பதே எப்போதும் உள்ள விருப்பம்.

இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன. இது புதிய வாசிப்பிற்கான அடையாளம் காட்டும் முயற்சி மட்டுமே. அக்கறை உள்ள வாசகன் நிச்சயம் இதிலிருந்து தனது வாசிப்பின் தளங்களை விரித்துக் கொண்டு செல்ல முடியும்.

- எஸ்.ராமகிருஷ்ணன்.

எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பரிந்துரைத்த 100 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இதோ......

1. காஞ்சனை – புதுமைப்பித்தன்

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்

3. செல்லம்மாள் – புதுமைப்பித்தன்

4. அழியாச்சுடர் - மௌனி

5. பிரபஞ்ச கானம் – மௌனி

6. விடியுமா – கு.ப.ரா

7. கனகாம்பரம் - கு.ப.ரா

8. நட்சத்திர குழந்தைகள் - பி.எஸ்.ராமையா

9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி

10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்

11. பாயசம் – தி.ஜானகிராமன்

12. ராஜா வந்திருக்கிறார் – கு.அழகிரிசாமி

13. அன்பளிப்பு – கு.அழகிரிசாமி

14. இருவர் கண்ட ஒரே கனவு – கு.அழகிரிசாமி

15. கோமதி – கி.ராஜநாராயணன்

16. கன்னிமை – கி.ராஜநாராயணன்

17. கதவு - கி.ராஜநாராயணன்

18. பிரசாதம் - சுந்தர ராமசாமி

19. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி

20. விகாசம் – சுந்தர ராமசாமி

21. பச்சைக்கனவு - லா.ச.ராமாமிருதம்

22. பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்

24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்

25. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன்

26. பிரயாணம் – அசோகமித்ரன்

27. குருபீடம் – ஜெயகாந்தன்

28. முன்நிலவும் பின்பனியும் – ஜெயகாந்தன்

29. அக்னிபிரவேசம் - ஜெயகாந்தன்

30. தாலியில் பூச்சூடியவர்கள் – பா.ஜெயபிரகாசம்

31. காடன் கண்டது – பிரமிள்

32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் – ஆதவன்

33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்

34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி.வெங்கட்ராம்

35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்

36. நீர்மை – ந.முத்துசாமி

37. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

38. காட்டிலே ஒரு மான் - அம்பை

39. எஸ்தர் – வண்ணநிலவன்

40. மிருகம் – வண்ணநிலவன்

41. பலாப்பழம் – வண்ணநிலவன்

42. சாமியார் ஜூவிற்கு போகிறார் – சம்பத்

43. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திரசோழன்

44. தனுமை – வண்ணதாசன்

45. நிலை – வண்ணதாசன்

46. நாயனம் – ஆ.மாதவன்

47. நகரம் - சுஜாதா

48. பிலிமோஸ்தவ் - சுஜாதா

49. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி

50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்

51. ஒடிய கால்கள் – ஜி.நாகராஜன்

52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி

53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி

54. ரீதி – பூமணி

55. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்

56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்

57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்

58. சோகவனம் - சோ.தர்மன்

59. இறகுகளும் பாறைகளும் - மாலன்

60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி

61. முங்கில் குருத்து – திலீப்குமார்

62. கடிதம் – திலீப்குமார்

63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்

64. சாசனம் – கந்தர்வன்

65. மேபல் - தஞ்சை பிரகாஷ்

66. அரசனின் வருகை – உமா வரதராஜன்

67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்

68. முள் – சாரு நிவேதிதா

69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்

70. வனம்மாள் - அழகிய பெரியவன்

71. கனவுக்கதை – சார்வாகன்

72. ஆண்மை – எஸ்.பொன்னுத்துரை

73. நீக்கல்கள் – சாந்தன்

74. மூன்று நகரங்களின் கதை - கலாமோகன்

75. அந்நியர்கள் – சூடாமணி

76. சித்தி – மா.அரங்கநாதன்

77. புயல் – கோபி கிருஷ்ணன்

78. மதினிமார்கள் கதை – கோணங்கி

79. கறுப்பு ரயில் – கோணங்கி

80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

81. பத்மவியூகம் – ஜெயமோகன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்

83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்

84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்

85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்

86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் – வேல.ராமமூர்த்தி

87. ஒரு திருணையின் பூர்வீகம் - சுயம்புலிங்கம்

88. காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்

89. காசி – பாதசாரி

90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமலாதித்த மாமல்லன்

91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்

92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி

93. வேட்டை – யூமா வாசுகி

94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்

95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி

96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா

97. ஹார்மோனியம் – செழியன்

98. தம்பி – கௌதம சித்தார்த்தன்

99. ஆண்களின் படித்துறை - ஜே.பி.சாணக்யா

100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

thank you http://www.thoguppukal.in