Friday, 7 March 2014

இயல் இயக்கவாதி


                இயல் இயக்கவாதி
                                         இன்றுடன் இவன் இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றனஊர்கார நன்பன் அறையில் ஆறாவது ஆளாக வந்தான்இப்போது இவனை போலமேலும் இருவர் உடன் சேர்ந்துவிட்டனர்காலை பாவா மெஸ்ஸில் மூனுஇட்லிஒருவடை காலை கதை முடிந்தது.  பத்துமணி வாக்கில் தீ.நகர் பேருந்துநிறுத்ததில் ஆங்கில பத்திரிக்கைகள் வாங்குவான்.  பெரும்பாலும் இந்துவும்டைம்ஸ் ஆஃப் இந்தியாவாக தான் இருக்கும்திருநெல்வேலியில் ஏதோ ஒரு கல்லூரியில் மின்னியல் படித்து,  இப்போது பி.பி.ஒ வில் வேலைபார்க்கும் தன் அறை நன்பன் (அதுக்கு ஏன் இவன் மின்னியல் படித்தான் என தெரியவில்லைமாதம்  15000  வரும்அறைக்கும் பஸ்க்கும் முக்கால்வாசி போய்டும்ஆனால் சனிக்கிழமை நைட் ஷோக்கு காசு இருக்கும் கூறிய சில சிறிய கம்பெனிகளுக்கு போக பஸ் ஏறுவான்பயணத்தின் பொழுது வாங்கிய நாழிதள்களை வாசித்துக்கொண்டிருப்பான்இந்து படித்தால்,  வக்காபுலரி (சொற்றகராதிவளருமாம் 
டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்தால் வாக்கிய அமைப்பு திறமை கூடுமாம்இதை கூட போன வா             ரம் சென்ற இண்டர்வியூ-ல் எச்.ஆர் அவன் பைலை அவனிடம் கொடுக்கும் போது சுற்றிக்காட்டினார் இல்லை இல்லை குத்திக்காட்டினார்இன்றும் எப்பொழுதும் போலதான் அனைத்தும் நடந் தனபேருந்து புறநகரை கடக்கும் பொழுது ஜென்னல் வழியே எட்டிப்பார்த்தான்அது பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்தப குதிஅவன் விரும்பி பார்த்து ஏங்குவது என்னவோ பென்ஸ் நிறுவனதொழிற்சாலையை தான்.  சும்மாவா இருக்கிறது அதில் நுழைய சீ.ஜி.பீ.  9 க்கு மேலே வேண்டும்ஹிஸ்ட்ரிய ஆஃப் அரியர் இருக்ககூடாது.  அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கினான்.  கிட்ட்தட்ட  800  மீட்டர் நடந்து அவன் செல்ல வேண்டிய நிறுவனத்தின் வாசலை அடைந்தான்உள்ளே சென்று வரவேற்பறை ஊழியரிடம் காரணத்தை சொல்லி, அருகில் இருந்தநாற்காளியில் அமர்ந்தான்.  இது பெரிய வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாம் தர உதி ரிபாகங்கள் செய்து கொடுக்கும் நிறுவனம்.  எப்படியும் இதில் ஒரு வேலைகிடைத்துவிடும் என்று ஒரு ஓரத்தில் நம்பிக்கைஅப்போது திடிர் என நினைவுக்கு வந்த்து. ”இந்த வாரத்துக்குள் அறை வாடகை கொடுக்கவேண்டும்.  அப்பாவை கொஞ்சம் அதிகமாக வங்கியில்  போட சொல்ல வேண்டும்”  என நினைத்தாற் போல் இருந்தான்.  வரவேற்பறை பெண் அருகில் வந்து ,
         “Excuse me sir. Now  yougo to H.R’s room. Go straight and take first right”
                    “Thank you” என்று கைக்குட்டையை எடுத்து நெற்றியை துடைத்துக்கொண்டான்.
         “Excuse me sir. May I come in”
                   “yes, come in”
                   “Take your seat man”
                  “Thankyou sir”
                   “your file”
                 “ yes sir”
                 “Surely sir”
அதில் முதல் பக்கத்தில் இருந்த ரெஸ்யூமை பார்த்தார் போல் இருந்தார்எண்ணி பத்தாவது நொடியில் அனைத்து சான்றிதல் களையும் பார்த்து விட்டு பைலை மூடினார்அவ்வளவு தான் இருந்தது பைலில்.  அதற்கு அவர் என்ன செய்வார்.
         ம்ம்ம்........எத்தன பெர்செண்டேஜ் ?  6.5 தான?”
                       எஸ் சார்
                       ஹ்ம்ம்ம்.....அப்பா என்ன பன்றார்?”
                       பி.ஆர்.சி  டிரைவர் சார்
ஹோ சரிஉங்க பைல் பாத்தேன்.  ஒன்னும் பிரச்சனை இல்ல.  சேல்ஸ், சர்வீஸ் இரண்டு இருக்கு
                       சர்வீஸ் எடுத்துக்கிறேன் சார்
                       பொருப்பாசர்வீஸ்ல வேக்கன்ஸி இல்ல. நீங்க சேல்ஸ்ச எடுத்துக் கோங்க. மூனு மாசம் அப்ரண்டீஸ்சா இருக்கனும்.  ஒரு வருசம் இங்க கண்டிப்ப வேலப் பாக்கனும். சம்பளம் அப்புறம் முடிவு பன்னி சொல்லுவோம்.  இன்னும் டூ டேஸ்ல உங்க மெயிலுக்கு கன்ப்பர்மேசன் லெட்டர் வரும்.  அப்புறம் வாங்க.  ஒகே
                     “okay sir. Thank you”
ஒரு வழியாக வேலை கிடைத்தது என சந்தோஷ படுவானஇல்லை இன்னும் மூனுமாசம் அப்பாட்ட தான் கை நீட்டனும்னு கவலை படுவானா?  மூன்று மாதம் கழித்து சம்பளமும் அவ்வளவு வராது. ஏழோ, எட்டோதான்வரும். இதற்கெல்லாம் இவன் கவலை படலாமா
இவன் யார்?  நம்ம மெஜர் சுந்தர் ராஜன் சார் ஸ்டைல்ல சொன்னால்
                               “ கவல படாத,  Don’t worry. நான் இதை சொல்லியே ஆகனும்.  I Want to tell this. நீ ஒரு இயந்திரவியல் பொறியாளர்  (இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர் ).  You are an MECHANICAL ENGINEER.”