Sunday 11 May 2014

ஏ பொண்ணே


                                    பொண்ணே
பொண்ணே,
என்ன  ஒரு
குழந்தைதனமான  கொலை
புனிதமான  பூகம்பம்
இனிமையான  இடி
கலைநயமான  கலவரம்
நீ  என்னை  கடந்துபோகும்   பொழுது……..

 பொண்ணே,
என்னிடம்
பூந்தொட்டிகளே   இல்லை
ஆனால்  இத்தணை  புதிய  பூக்கள்
மீன்தொட்டிகளே  இல்லை
ஆனால்  இத்தனை  வண்ணமீன்கள்
மழைமேகங்களே   இல்லை
ஆனால்  இத்தணை  குளிர் சாரல்
நீ  என்  தோள்  சாயும்  பொழுது………..

பொண்ணே,
குடித்தேன்
முதல்  மழைதுளியை
திகட்டாத  தேனை
மனம்வீசும்  மதுவை
உன்   இதழ்  நனைக்கும்  பொழுது………..

பொண்ணே,
என்னுள்  எத்தணை 
கற்பழிப்புகள்
கீறல்கள்
கதறல்கள்
காயங்கள்
உன்  கோவத்தால்……….

பொண்ணே,
என்னை  சுற்றி
எத்தணை
பாலைவனங்கள்
மயாணங்கள்
பற்றிஎரியும்  மரங்கள்
கரையில்லா  தீவுகள்
உன்  பிரிவில்……

பொண்ணே,
நான்  வைத்திருக்கிறேன்
சாம்பலான  சூரியன்
அழுகிய  நிலா
கருகிய  இரவு
ஓய்வுபெற்ற  மூச்சு
ஊசிப்போன  இதயம்
உன்  நினைவாக……..

 பொண்ணே
இந்த  எல்லாவற்றுக்கும்  பெயர்  தான்
என்ன  பொண்ணே????????............
                            -   அரவிந்ராஜ் ரமேஷ்






No comments:

Post a Comment