Thursday 14 June 2018

காளி

                             காளி
              காளிக்கு இது ஒன்பதாவது மாதம். கடந்த மூன்று மாதங்களாக தன் அம்மா வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று தன்னை பார்க்க வந்த கணவன், பழங்களோ, ஊட்டச்சத்து மருந்துகளோ வாங்கிவராமல், அறிவுரைகளை மட்டும் கொண்டுவந்தது, அவன் மீது வெறுப்பையும், தன் தாய்வீட்டு பணநிலைமையை நினைத்து கவலையையும் உண்டு பண்ணியது. இந்த கவலை, இரண்டு நாட்களாகவே அவளை வாட்டியது. அதற்காக முதல் குழந்தையை கவனிக்காமல் இருக்கமுடியுமா? காம்பவுண்ட் வாசலில் அமர்ந்துக்கொண்டு, கிண்ணத்திலிருந்த சுடுகஞ்சியை தன் குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். காளியின் அப்பா தன் ட்ரை-சைக்கிளில் குழந்தையை அமரவைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வாய்க்கும் தன் பேத்தியை தூக்கிக்கொண்டு ட்ரை-சைக்கிளுக்கு ஓடுவது, அவருக்கு ஏனோ ஒரு பெரிய சந்தோஷம். இரண்டு நாட்களாக அவருக்கு எந்த சவாரியும் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் வாரத்தில் ஆறு நாட்கள் சவாரி கிடைக்கும். சில நேரங்களில் எழு நாட்களும். ஆனால் மினி டோர், சின்ன யானைகள் வந்தவுடன், இவர் தொழில் படுத்துவிட்டது. எந்த வண்டியும் கிடைக்காத நேரங்களில் அவசரத்திற்கு அழைக்கும் அப்பள கம்பேனிக்காரர்களும், மினி டோருக்கும், சின்ன யானைக்கும் வாடகை கொடுக்க வசதியில்லாதவர்களும் தான் இவர் வாடிக்கையாளர்கள்.
       காளி, “அப்பா, மணி என்ன முடிவெடுத்திருக்கான்?”
         “தெரியலயேமா. உன் தம்பிட்ட தான் கேக்கனும். இல்ல உங்கம்மா வருவா அவள்ட கேளு”
         “என்னப்பா அவன்ட எதுவும் கேக்க மாட்டிங்களா?”
         “அவன்ட என்னம்மா கேக்க? பாவம் அவனே நொந்து போயிருக்கான்…. அவன்ட எதுவும் கேட்டுக்காத. உங்கம்மா இப்ப பூவித்துட்டு வந்துருவா அவள்டயே கேளு”
       மணி, காளியுடைய தம்பி. காளிக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். சிவகங்கையில் கல்யாணமாகி போய்விட்டாள். ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. போன வாரம் வந்திருந்தாள். மணியுடைய கதை தான் பெரிய கதை.
        மணி பத்தாவது வரை அருகில் உள்ள மாநகராட்சியில் படித்தான்.  அதற்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு தெரு நண்பர்களுடன் ஊர் சுற்றப்பழகிக்கொண்டான். பின்பு சிகிரட், குடிப்பழக்கம், கஞ்சா என இளம்பருவ போதைகளுக்கு தன்னை அடிமையாக்கிக்கொண்டான். போதையில் நண்பர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு, தெருகளில் விகாரமான ‘ஹாரன்’ சத்தத்துடன் கண்மூடித்தனமான வேகத்தில் போவது தான் அவனுக்கு பொழுதுபோக்கு, வேலை, கடமை. தெருக்காரர்கள் வாயில் விலாத நாளே இல்லை. குடும்பத்தாராலும் அவனை திருத்த முடியவில்லை. போன வருடம், தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில், போதையில் பெரிய இடத்துப் பெண்களிடம் ஈவ்டீசிங் செய்ததற்காக ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வந்தான். அவனை போலிஸார் இழுத்து செல்லும் பொழுது, போதையில் சுயநினைவிற்றி இருந்தான். கைலி அவிழ்வதைக் கூட அவனால் உணர முடியவில்லை. கஞ்சா வைத்திருந்த குற்றத்தையும் ‘எஃப்.ஐ.ஆரில்’ சேர்ப்பதாக இருந்தது. ஆனால் அவன் தாய், இன்ஸ்பெக்டர் காலில் விலாத குறையாக கெஞ்சியதால், அதை இன்ஸ்பெக்டர் மறைத்துவிட்டார். அதற்கு பின் அவன் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறியது. அல்லது அவனே திருந்திக்கொண்டு தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டான். கடந்த ஒரு வருடமாக எந்த வித போதை வஸ்துகள் மீது கை வைப்பதில்லை. பஜாரில் உள்ள ஒரு ‘எலக்ட்ரானிக்ஸ்’ கடையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த கடையையும் போன மாதம் மூடிவிட்டார்கள். ஒரு மாதமாக வீட்டில் தான் இருக்கிறான்.
         சிறிது நேரத்தில் காளியின் அம்மாவும் வந்துவிட்டாள். பூக்கூடையை இறக்கி வைத்துவிட்டு. காளியின் அருகில் அமர்ந்தாள். அவளை பார்த்தவுடன், குழந்தை ”அம்மாச்சி” என்று சந்தோஷத்தில் குதித்தது,. கணவனிடம் இருந்து குழந்தையை வாங்கி, மடியில் உட்கார வைத்துக்கொண்டாள்.
        “கண்ணுக்குட்டி சோறு சாப்புடுங்க? அம்மாச்சி ஊட்டிவுடட்டா?”
   குழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தது,
      “காளி, பரவால்லடி இன்னைக்கி எல்லாம் சீக்கிரமா வித்துடுச்சு”
      “என்ன இன்னைக்கி  எதாவது விஷேசமா? நெத்துதான முகுர்த்தம்?”
      “தெரியல என்னனே… வித்துச்சே அது போதும்டி”
      “ஆமா… ஆமா…”
      “மணி வந்தானா?”
      “இன்னும் வரலையே”
      “ஏங்க உங்கள்ட எதாவது சொல்லிட்டு போனானா?”
     “என்ட எதுவும் சொல்லலடி”
     “காலைல ஏழு மணிக்கு போனான். இன்னும் வரலம்மா”
      “அடப்பாவி, சாப்டானா?”
      “எங்க ஏழு மணிக்கு யாரு சமைக்கிறா?”
     “சாப்புடாம கொள்ளாம எங்க திரியிறான்?”
     “சரி, என்னப்பண்ணப் போறானு அவன்ட எதுவும் விசாரிச்சையா?”
     “இல்லடி… நல்ல நேரமா பாத்துக்கேக்கனும்”
     “ஆமாம்மா.. நீ ஜோசியம் பாரு நல்ல நேரம் எப்பனு”
     “இது என்னடி கொடும? அவன் என்ன வேலைக்கு போக மாட்டேனா சொல்லப்போறான்?”
     “அதுக்காக நீ கேக்கக்கூடாதா?”
     “ஒரு வருசமா இராப்பகல ஒழக்கெலையா? தெனோ காலைல எட்டு மணிக்கு போய்ட்டு ராத்திரி பத்து பதினோரு மணிக்கு தான வருவான். சம்பாதிச்ச காச எல்லாம் அவனா வச்சுக்கிட்டான். உங்களுக்கு தானடி செஞ்சான். உம்பிள்ள காது குத்துக்கு செய்யலையா? அதுக்கே உம்மாமியார் மூஞ்சியத்தூக்குச்சே. உந்தங்கச்சிக்கு செய்யலையா? அடுத்து பொறக்கப்போற  உம்பிள்ளைக்கும் அவன் செய்வான். என்ன இப்பிடி பேசுற? என்னமோ ஒரு மாசம் வேலைக்கு போகலனா ஆளாலுக்கு அவன கேப்பிங்களா?”, கோவத்தில் அணைத்தையும் கொட்டித்தீர்த்து விட்டாள்.
     காளிக்கு கோவமும், அழுகையுமாய் வந்தது. ’தனக்கு, தன் பிள்ளைகளுக்கும் அவன் செய்ய வேண்டும், அதற்காக அவன் வேலைக்கு போக வேண்டும்’ என்று காளி எண்ணுவதாக இருந்தது, அவள் அம்மாவுடைய பேச்சு. ஆனால் காளி ஒருபோது அப்படி எண்ணவில்லை. அவனுக்கு ஒரு நிரந்திர வேலை கிடைத்துவிட்டால், அவன் அவனையும் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்வான். அப்பாவுக்கும் முன்பு போல சரியாக வேலை கிடைக்காமல் இருப்பது தான் மணியை சிக்கிரம் வேலைக்கு போகுமாறு வற்புறுத்த வேண்டும் என்று தோன்றியது. தன் பிள்ளைக்கு அவன் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலும், இனி எதுவும் செய்யவில்லை என்றாலும் அவளுடைய எண்ணம், ஆசை இதுவாகத்தான் இருக்கும். தாயுடன் வாதம் செய்ய காளி விரும்பவில்லை. எதுவும் பேசாமல், கிண்ணத்திலிருந்த கஞ்யை பிசைய ஆரம்பித்துவிட்டாள்.
     மதியம் ஒரு மணி போல, மணி வந்தான். வந்தவுடன் காளியின் குழந்தையை தூக்கிக் கொஞ்சத் தொடங்கிவிட்டான். காளியும் அப்பாவும் அமைதியாக இருந்தனர்.
     “எங்கடா போன? காலைல விடுஞ்சு போய்ட்டு இப்பதான் வர. சாப்டியா இல்லையா? சாப்பாடு போடவா?”
     “பாண்டி அண்ணன பாக்க போயிருந்தேன். ரெண்டுமூனு பேர்ட சொல்லி வைக்கிறேனு சொன்னாரு. பாப்போம். சேர் ஆட்டோ வாடகைக்கு கெடைக்குறது தான பெருந்தலவலியா இருக்கு”
    சேர் ஆட்டோ ஓட்டப்போவதாக மணி சொன்னதும், அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவள் தினமும் பூ விற்கச்செல்லும் போதும், பூ மார்க்கெட்க்கு போகும் போதும், சேர் ஆட்டோக் காரர்கள் படும்பாட்டை பார்த்திருக்கிறாள். பல முறை அவள் கண்முன்னாலேயே அவர்கள் போலிஸ்காரர்களிடம் அடிவாங்குவதையும், அதற்கு பயந்து அவர்கள் ஓடுவதையும் பார்த்திருக்கிறாள். ஆட்டோ ஓட்டுவதாக தன் மகன் எடுத்த முடிவு மகிழ்ச்சியாக இருந்தாலும், சேர் ஆட்டோ ஓட்டுவதாகச் சொன்னது தான் அவளுக்கு பிரச்சணையாக இருந்தது.  
              ”மணி ஆட்டோ ஓட்டுப்பா வேணானு சொல்லல. ஆனா சேர் ஆட்டோ வேணாம்ப்பா”
          “ஏன் அதுக்கென்ன கொறச்சல்”
          “ரோட்ல நின்னு கண்டவன்ட அடிவாங்கனும். போலிஸ்காரங்க வேற அடிக்கடி காசு புடுங்குவானுங்க.”
           “அதெல்லாம் பாத்த சாப்புட முடியுமா?”
           “ஏன் சின்ன ஆட்டோ ஓட்டுனா சாப்புட முடியாதா? ஏன் பாண்டி நல்லாதான இருக்கான். தெநோ நானூரு ருபா வீட்டுக்கு கொண்டுவந்தா பத்தாதா?”
           “யோசிச்சு சொல்றேன்”
          “யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு. நீ சின்ன ஆட்டோவே ஓட்டுப்பா”
          “சரி சரி.. நீ சாப்பட எடுத்துவை”
          “மணி, பாண்டிட்ட சொன்ன உடனே எற்பாடு பண்ணித்தருவான்.”
          “ம்ம்ம்.. சாப்டு போறேன்”
          காளிக்கு பெரிய கவலை ஒன்று போய்விட்டதாக இருந்தது. தன் மகளை அழைத்து, “பாப்பா, மாமா ஆட்டோ வாங்கப் போறான். நாம அதுலையே ஆஸ்பத்திரிக்கு, வீட்டுக்கு போய்ட்டு வரலாம்.”
                   “காளி, உன் பிரசவத்துக்கு நான் தான் உன்ன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவேன். உன் வீட்டுக்காரர்ட சொல்லிரு”
       மணி சொன்னபடியே செய்திருப்பான்.  
  
               

சமீபத்தில் ‘களப்பிரர்கள்’ பற்றிய மின்நூள் ஒன்று இணையத்தில் கிடைத்தது. 
நடன.காசி நாதன் எம்.ஏ (பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை) எழுதியிருக்கிறார். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10ஆம் நூற்றாண்டு பற்றிய முழு வரலாறு இந்நூலில் எழுதப்பட்டிருக்கிறது. பல்வேறு கல்வெட்டுகளை சான்றாக கொண்டு இதை எழுதியுள்ளார். களப்பிரர்கள் பற்றிய அடிப்படை அறிவை என்போன்ற கடைநிலை மாணவர்களுக்கு இது தரும். இந்நூலில் உள்ள முக்கிய பகுதிகளை மட்டும் கீழே போட்டிருக்கிறேன்.
களப்பிரர்கள் வருகை
தமிழகத்தில் களப்பிரர்கள் வருகை


களப்பிரர்களின் ஆதி பிறப்பிடம்
மூவேந்தர்களை வென்றவன்
வேள்ளிக்குடிச் செப்பேடுகள்
தளவாய்புரச் செப்பேடுகள்
களப்பிரர்கள் முத்தரையர்கள் –
                  இருவரும் ஒருவர் தான் என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு ஆசிரியர் தரும் விளக்கம்.
கொங்கு நாட்டில் களப்பிரர்கள்
களப்பிரர்கள் சமயம் –
        வரலாற்றிலிருந்து ஒதுக்கப்பட்டதால் இவர்கள் பெளத்த அல்லது சமண சமயத்தவராக இருக்கலாம் என்பது சிலரின் கூற்று. ஆனால் உண்மை அதுவல்ல…
பெளதமா?
அப்ப அவர்கள் வைதீகமா?
களப்பிரர்கள் காசு
 
ம்ஞ்                                                                                                                                                                                                           
                       களப்பிரர்கள் பற்றி திரு. கிருஷ்ணசாமி முதல் பல வரலாற்றாசிரியர்கள் சில குறிப்பு அளவில் கூறியுள்ளனர்,
சமீப நூல்கள்
தமிழ்நாடும் களப்பிரர்கள் ஆட்சியும் – இரா.பன்னீர்செல்வம்
களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி
பாண்டிய நாட்டில் களப்பிரர்கள் – மு.அருணாசலம்.
                              நன்றி