Friday, 31 October 2014


                                                     
                             அவருக்கு நடுநிசியில் விழிப்பு வந்தது. அடிநாக்கு வற்றியது போல் இருந்தது. மெலிந்த வலுவற்ற கைகளை இருவாக்காக ஊன்றி எழுந்தார். கட்டிலுக்கு அடியிலிருந்த கைத்தடியை எடுத்துக்கொண்டார்.  அடுப்படியை நோக்கி, அந்த இருட்டறையில் நடந்தார். அவருக்கு ரோஜா பூக்களின் வாசனையடிக்கத் தொடங்கியது. நடக்கும் வழியில் சிலர் அமர்ந்திருப்பது  போல் உணர்ந்தார். தடியால் துலாவிப்பார்த்தார், யாரும் இல்லை. சுவரோரமாகவே நடந்துச் சென்று அடுப்படிக்கு போனார். தண்ணீரைக் குடித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடல் ஐஸ்கட்டியைப் போல் ஜில்லென்றிருந்தது. மீண்டும் சுவரோரமாக நடந்து வருகையில் பத்திவாசனை வந்தது. அதை பொருட்படுத்தாமல் கட்டிலில் போய் படுத்துக்கொண்டார்.  கண்களை மூடினார். ஒப்பாரிக்குரல் கேட்டது. பயந்துப் போனவர் விழித்து மேலிருட்டையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அயர்ந்துத் தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுகையில் உடம்பில் ஒரு அபார சக்தியை உணர்ந்தார். எந்தக் கஷ்டமுமின்றி உற்சாகமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றார்.   திரும்பிக் கட்டிலைப் பார்த்தார், அதில் அவர் சவ அலங்காரத்துடன்  படுக்க வைக்கப்பட்டிருந்தார். நின்றுக்கொண்டிருந்த அவருக்கு, உடம்பு பற்றியெரிவதுப் போலிருந்தது.  அழுகையும் வாசனையும் இப்போது இல்லை. மயான அமைதியை உணர்ந்தார்.
                            

Sunday, 26 October 2014

Selfieeee pulla                  
அம்மூ எந்திரி……. அம்மூ…. அம்மூ……..”
                     இவற்றை காதுகளில் வாங்கிக்கொண்டு மெத்தை தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு படுத்திருந்தாள் அம்மூ. எழ முடியாத அளவு தூக்கம் அம்முவை அமுக்கியது.
                 அம்மூ. முகப்புத்தகத்தில் முடிசூடா ராணி. ஐந்தாயிரத்தை தாண்டிய நட்பு பட்டியல். ஆயிரத்திற்கும் மேலான பின்தொடர்பவர்கள். கணக்கை தொடங்கிய நாட்களில் தினமும் குறைந்தது ஐந்து நட்பு வேண்டுகோள் வரும். அவற்றை பாரபட்சம் இன்றி ஏற்றுக்கொள்வாள். கணக்கை தொடங்கி மூன்று மாதத்திலேயே  ஐந்தாயிரத்தை தாண்டிய நட்பு பட்டியலை பெற்றுவிட்டாள். இவளுக்கு ஏன் இப்படி ஒரு மவுசு? நேரம் தவறாமல் கவிதை எழுதி போஸ்ட் செய்வதில்லை, தன் போஸ்டில் இரட்டையலைகற்றையை இழுத்ததும் கிடையாது, சொத்துக்குவிப்பை சுரண்டிப் பார்த்ததும் கிடையாது, இவ்வளவு ஏன்?. ராகுல்தான் மோடியின் மூத்தப் புதல்வர் என்று தேர்தல் முடிவு வரும் வரை எண்ணிக்கொண்டிருந்தாள்.  சமீபத்தில் படித்தப் புத்தகம்’, ஆஷ்டேகில் படித்தில் பிடித்தது, கடித்ததில் ருசித்தது, மடித்ததில் விரித்தது என்று போஸ்ட் போட்டு சேட்டைகள் செய்தது கிடையாது. ஜெ.மோ பற்றியோ சாரு பற்றியோ கேட்டாள், “அதெல்லாம் ஒரு டிஷ்ஸா? நேத்து சோலே மசாலா பூரி சாப்டேன். அதுக்கு முன்னாடி நீ சொன்னதெல்லாம் நிக்கமுடியுமா?” என்று கேட்டு நம்மை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குவாள். கம்யூனிசம் பற்றியோ திராவிடம் பற்றியோ போஸ்ட் போடும் பக்கங்களைகூட அவள் லைக் செய்ததில்லை. நான்-வெஜ் ஜோக்குகள் போடும் அளவுக்கு திறமையும் அனுபவமும் கிடையாது. ‘நாங்களும் எழுதுவோம்லஎன்று ப்ளாக்கில் எழுதி, அதன் லின்கை உள்டப்பியில் அனுப்பி, “ஒழுங்கா படிச்சிட்டு பாராட்டுஎன்று சொல்லாமல் சொல்லும் மனிதநேயமற்ற மகாபாவிகள் லிஸ்டிலும் இவள் கிடையாது. “ இந்த சமுதாயம் என்பது, பின்நவீனத்துவம், நெஞ்சு பொருக்குதில்லையே, முதலாளித்துவ, ஜனநாயக முறை படி, நவீன இலக்கியத்தின் வாயிலாக, வர்க்கம், சாரம், மத்திய மாநில அரசுகள், மக்களின் அடிப்படை, சட்டத்திட்டங்களை, ஆணாதிக்கம்போன்ற இணைய பிரபலங்களின் அத்தியாவசிய வார்த்தைகளை, மார்க் மேல் சத்தியமாக இவள் டைம்லையனில் யாரும் பார்க்கவே முடியாது. முகப்புத்தக சமுதாயத்தில் உள்ள எல்லா பெண்களை போலவே இவளும் சிவகார்த்திகேயனின் ரசிகை. முன்பு சூரியா ரசிகை. உள்டப்பியில் வரும் அணைவரிடமும் பேசுவதில்லை. பின் ஏன் இத்தணை நட்பு இவளுக்கு பின்னால்?
             வேறொன்றும் இல்லை. காலை முகம் கழுவுவதில் இருந்து, இரவு இழுத்துப்போத்தி தூங்கும் வரை அணைத்தையும் அலைபேசியின் முன் பக்க கெமராவில் முகத்தை கோணல்மானலாக வைத்துக்கொண்டு படம்பிடித்து தன் அக்கவுண்டில் போட்டுக் கொள்வாள். அதற்கு முகப்புத்தக மொழிதனில் செல்ஃபி என்று பெயர். “ காட் அப்என்று தொடங்கிஐம் கொயிங் டு பெட்வரை போட்டப் படத்திற்கு லைக் வரவில்லை என்று அவள் என்றுமே வருந்தியது கிடையாது. வெளிவுலகத்தில் ஆண்கள் எப்பிடி என்று தெரியாது, ஆனால் இந்த முகப்புத்தகதில் பெண்களை ஆண்கள் ஒருபோதும் வருத்தமடைய செய்தது இல்லை. படம் பதிவேற்றம் செய்த மைக்ரோ நோடிகளில் லைக்குகளும் ஸ்மைலி பின்ணோட்டங்களும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டுவரும். அதற்கு அம்மூவும் விதிவிலக்கல்ல. மேலும் அம்மூவின் ரிலேசன்ஷிப் ஸ்டேடஸ் சிங்கிலாக இருந்தது. ” உன் அம்மூ என்ன அப்படி ஒரு அழகா?” என்று நீங்கள் கேட்டாள். நேகமாக நீங்கள் சமீபத்தில் தான் ஆதிவாசி மனிதனிலிருந்து அண்டர்வேர் அணியும் மனிதனாக மாறினீர்கள் என்று அடித்துக்கூறுவேன். ஏனெனில் பிக்காஸாவும், ஃபோடோ ஷாபும் பெண்களை ருஷ்ய இலக்கியங்களில் காட்டப்படுவதைவிட அழகாக காட்டுகிறது. அம்மூ இப்படி தூங்கக்காரணம். சமீபத்தில் அதாவது எழுமணிநேரத்திற்கு முன்பு நடந்த ஒரு ஆழமான சம்பவம். அது கீழ்வருமாறு.
               அம்மூ அவனை முதன்முதலில் பார்த்தது, தனது நெருங்கிய தோழியின் ப்ரொபைல் படப் பின்ணோட்டத்தில் தான். அந்த படத்தில் அம்மூவும் அவள் தோழியும், கண்ணத்தை ஒட்டினார் போல் செல்ஃபி கொடுத்திருந்தனர். தோழியை அவன் பகடி செய்ய, அவனுக்கு உதவியாக பின்ணோட்டம் செய்தது மூலம் இவர்கள் நட்பு ஆரம்பமானது. பின் அந்த தோழி செய்யும் எல்லா செல்ஃபியிலும் பின்ணோட்டத்தை பின்புலமாக வைத்து, இவர்கள் நட்பு வேறூன்றியது. ஒரு நாள் அவன் தன் மனதை கல்லாக்கிக்கொண்டு அம்மூவுக்கு நட்பு வேண்டுகோள்விடுத்தான். அவளுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அதை அவள் எற்கனவே விருப்பத்துடன் எதிர்ப்பார்த்திருந்தாள். அவனை நட்பு பட்டியலில் சேர்த்துக்கொண்டாள். பின் அவள் போடும் எல்லா செல்ஃபியிலும் அவனுடைய லைக்கும் பின்ணோட்டமும் தவறாமல் இடம்பெரும். ஒரு நாள் அம்மூ, முகத்தை நாணிக்கோணியவாரு செல்ஃபி போட்டு, “லிஸனிக் டு தும்கி ஹோஎன்று போட்டாள். எப்பொழுதும் போல், ‘தும்கிஹோனா ஸ்வீட்டா காரமானுகூட தெரியவில்லை என்றாலும் பலர் லைக்கும்  பின்ணோட்டமும் தந்தனர். ஆனால் ஸ்டேடஸ் போட்டு முழுதாக மூன்று நிமிடங்களாகியும் அவனிடமிருந்து எந்த லைக்கும் வரவில்லை. அம்மூவிற்கு கோவம் தலைக்கேறியது. பின்பு தன்னை சாந்தப்படுத்திக்கொண்டு, “ஒரு வேள அவனுக்கு நெடொர்க்கு ஃப்ராபலமா? இல்ல நெட் பேலன்ஸ் முடின்சா? ஆனா ஆன்லையன்ல இருக்கானு காட்டுதுஎன்று தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
அவனுக்குஹாய்என்று அனுப்பலாம் என்று தோன்றியது. ஆனால் இதுவரை அவள் முதலில் ஹாய் சொல்லி சாட்டை ஆரம்பித்தது கிடையாது. தினமும் அவன் தான் பிள்ளையார் சுழி போடுவான். எனவே அவள் முதலில் ஹாய் அனுப்புவது, அவளுக்குகெத்துக்குறைவாகஇருந்தது. சரி போனால்போகிறதென்று பிள்ளையார் சுழிப்போட்டாள். நீண்ட நேரமாகியும் பதில் வந்தப்பாடில்லை. ஆனால்சீன்னென்று மட்டும் காட்டியது. பொறுமையிழந்த அம்மூ. ‘அபவ்டில் அலைப்பேசி எண்ணை பார்த்து தொடர்புக்கொண்டாள். நீண்ட நேரம் மணியடித்தது. ஐந்தாவது ரிங்கில் அவன் ஆன் செய்தான்.
            ஹலோ யாரு?......  ஹலோ..... ஹலோ?”
                   அம்மூ பேசமுடியாமல் வாயடைத்துக் கிடந்தாள்.
         ஒருவழியாக, “ஹலோ நா அம்மூ
                   ஹ்ம்ம் சொல்லு அம்மூ
                    இல்ல சாட்ல இருக்கீங்க ஆனா ரிப்லே வரல அதான் கால் பன்னேன்.”
                ஹோ சாரி நா செரியா பாக்கல போல
                சரி நா வச்சிற்றேன்
                 இதான் உங்க நம்பரா?”
                  ஆமா
                   ஒகே சாட்ல பேசுவோம்
              அலைபேசி அணைத்தவன்,”ஹேய்ய்ய்ய் யெப்பிடி போன் பன்ன வச்சோம்லஎன்று துள்ளிக்குதித்தான். அந்த சம்பவத்திற்கு பின் இவர்கள் நட்பு நாள்தவறாமல் வளர்ந்தபாடு இருந்தாது. செல்ஃபிக்களும், ஸ்டேடஸ்களும், பின்ணோட்டங்களும் அவர்கள் காலத்தை மெல்ல மெல்ல மின்னால் வேகத்தில் நகர்தியது.
சாட்டில் பெரும்பாலும் ஸ்மைலிக்களே பரிமாறிக்கொண்டனர். காரணம் அந்த ஸ்மைலிக்களுக்குப் பின்னால் பல வெட்கங்கள் இருந்தது. ஒரு கரும்கும்மான இரவு வேளை. நிலாவே பிளந்துத்தூங்கிக் கொண்டிருந்தது. நேரம் இரவு 2.23. அந்த சாட் அணைத்து காதோல் ஜோடிகளை போல ஆஃப் லையனில் தான் நடந்துக்கொண்டிருந்தது. அந்த இருட்டான இனிய பொழுதில், அவர்கள் தங்கள் காதலை அவனிடமிருந்து இவளும், இவளிடமிருந்து அவனும் எந்தவித எர்ரரும் இன்றி தங்கள் இருதய சர்வரில் டவுன்லோடு செய்துக்கொண்டனர். ஆம். அவன் தன் அம்மூவிற்கு கண்களில் ஹாட் வடிவம் கொண்ட ஸ்மைலியும், லவ் யு வாசகத்தையும் அனுப்பினான். அதை பார்த்த அவளுக்கு, ஒரே செல்ஃபிக்கு ஒரே நாளில் 600 லைக்கு வந்ததுபோல், மனது ஜிவ்வென்றாகியது. அவன் அனுப்பியதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து அவளுக்கு அனுப்பினாள்.
                  அடுத்த இரண்டு நிமிடத்தில், அவளின் ரிலேசன்ஷிப் ஸ்டேடஸ்இன் ரிலேசன்ஷிப்ஆக மாறியது, அவள் வெட்கம் தெறிக்கும் முகபாவனை செல்ஃபியுடன்.                       
               பேக் டூ பெட். “அம்மூ அப்பா வைய போறாரு. மணி பத்துக்கு மேல ஆச்சு