Saturday, 19 July 2014

ஒரு வடையின் டைரிஒரு காலை நேரத்தில் காக்கையார் ஒருவர் ஓட்டை வடை சுட்டுக்கொண்டிருந்தார். கைப்பேசியில் அழைப்பு வந்ததால், அதை எடுக்க எழுந்துச் சென்றார். அதை பார்த்த பாட்டி ஒன்று, அவர் சுட்டக் கொண்டிருந்த ஒரே ஒரு ஓட்டை வடையை திருடிச் சென்றது. அதை காக்கையார் கவனிக்கவில்லை. ஓட்டை வடையை உண்ணப்போகையில், ஜெரி என்கிற எலியார் ஒருவர் அதைப் பார்த்துவிட்டார். பாட்டியின் அருகில் சென்று, ”உன்னோட குரல் ஸ்ரேயா கோஷல் மாதிரி இருக்கு. ரகுமான் சார் கம்போஸ்ல ஒரு பாட்டு பாடுஎன்று கூறினார். அதை கேட்ட பாட்டி, வாயை துறந்துப் பாடத்தொடங்கியது, ”முன்பே வா என் அன்பே வா…”.ஓட்டை வடை கீழேவிழுந்தது. ஜெரி ஓட்டை வடையை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். ஜெரி தன் பரம எதிரியான டாம் என்கிற பூனையாரை பொறி வைத்துப் பிடிக்க முடிவு செய்து, ஓட்டைவடையை ஓரு கூண்டில் வைத்தார். ஜெரி எண்ணியவாறே டாம் கூண்டில் மாட்டிக் கொண்டு கதறியது. இந்த விசயத்தை அறிந்த டாமின் நண்பரான ஸ்கூபிடூ, ஜெரியை தீர்த்துக்கட்டிவிட்டு, டாமை மீட்டு வருமாறு தன் செல்லப்பிராணி சக்திமெனை அனுப்பியது. சக்திமென் எஜமானனின் ஆனைக்கினங்க தன் சக்தியால் ஜெரியைக் கொன்றுவிட்டு, டாமை மீட்டது. ஆதனால் டாமுக்கு சக்திமென் மீது ஆன்புவந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது. அதற்க்கு சக்திமென், “என் காதலி பார்பியை அவள் தாய்மாமன் பாப்பாய் தன் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறது. அவளை மீட்கவேண்டும். அதற்கு எனக்குக் கூடுதல் சக்தி வேண்டும்என்றது. உடனே டாம், “இது தான் போக்கிமேன்பால். இதில் இருந்து வரும் சக்தி பெற்ற மிருகங்கள் உனக்கு உதவும். என்னிடம் இருக்கும் ஓரே சக்தி இதுதான். ஆனால் என்னால் இதை பயன்படுத்த முடியாது. இதை ஒரு வளர்ப்பு பிராணிதான் பயன்படுத்த முடியும்என்றார். சக்திமென் பாப்பாய்யின் வீட்டை அடைந்தது. போக்கிமேன்பாலை பிரயோகப்படுத்தி, பீக்கச்சுவை வரவழைத்து பாப்பாயை வீழ்த்திவிட்டு, தன் காதலி பார்பியை மீட்டு கல்யாணம் செய்துக்கொண்டது. தன் மனைவியுடன் அடுத்த நிமிடமே ஃப்லின்ஸ்டொனுக்கு தேன்னிலவுக்கு சென்றது. அங்கு பவர்ரேஞ்ர் ரவுடி கும்பலுக்கும் பென்டென் ரவுடிகும்பலுக்கும் சண்டை நடந்துக் கொண்டிருந்தது. பென்டென் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்டி, அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த ரிச்சிரிச்சையும் அவரின் பணத்தையும் கைப்பற்றியது பவர்ரேஞ்ர் ரவுடி கும்பல். இந்த செய்தி எப்படியோ அகில உலக சூப்பர் ஸ்டார் ஜானி ப்ராவோவுக்கு தெரியவர, தன் நண்பர் ரிச்சிரிச்சை காப்பாற்ற தன் தோழிகள் பவர்பஃப் கேல்சுடன் பவர்ரேஞ்ர் ரவுடிகும்பல் இருக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு பவர்ரேஞ்ர் ரவுடி கும்பலின் செல்லப்பிராணி ஹல்க் அமர்ந்திருந்தது .அகில உலக சூப்பர் ஸ்டார் ஜானி ப்ராவோவை பார்த்ததும், கோபம் தலைக்கேறி அருகில் இருந்த மலையை பிய்த்துமேலே வீசியது. அந்த மலைவானத்தில் இருந்த நிலாவில் விழுந்தது. அங்கே ஓட்டைவடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியின் கடையை மலை தாக்கியது. மலைப்பாறைகள் சட்டியின் மீது பலமாக மோதியது. சட்டியில் இருந்த ஒரே ஒரு ஓட்டைவடை அங்கிருந்து தூக்கிவீசப்பட்டு, பூமியை நோக்கி வந்து காக்கையார் சட்டியில் விழுந்தது. கைப்பேசியில் தன் நண்பன் டொனால்டக்குடன் பேசிவிட்டுவந்து, சட்டியில் இருந்த ஓட்டைவடையை கரண்டியால் எடுத்தார். அன்று அம்மாவாசை என்பதால், அந்த ஒருஓட்டை வடையை, இறந்துப்போன தன் செல்லப்பிராணி ஹிமேனுக்கு மொட்டை மாடியில் படையல் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது கீழே எதோ சத்தம் கேட்க கீழே சென்று பார்த்துவிட்டு மேலே வந்தார். மேலே வந்த காக்கையார் அதிர்ந்துப் போனார். ஆம் படையலில் வைக்கப்பட்ட ஓட்டை வடையை காணவில்லை…….
-   தொடரும்  1


இரண்டு கப் காஃபி  “காஃபி??”,அவளை நோக்கியவாறு கேட்டான்.
இன்றைய நவநாகரீக டீ-ஸ்ர்ட் தலைமுறைகள் அதிகம் சங்கமிக்கும் நவீன குளிரூட்டப்பட்ட தேனீர்விடுதி. எப்போதும் அமரும் வடக்குதிசையில் உள்ள கடைசி இரட்டை நாற்காலிகள் கொண்ட மேஜை தான் இன்றும்.
இல்ல வேணாம்என்று மென்று முலுங்கினாள்.
                ”சரி சொல்லு அச்சிரா
சிறிது மெளனத்திற்கு பிறகு பேசதொடங்கினாள். அவன் நாற்காலியின் ஒரு ஓரமாக சாய்ந்துக்கொண்டு, அவள் இசையிதழை பார்த்தவாறு இருந்தான்.
அபிலாஷ் எப்பிடி சொல்றதுனு தெரியல. நீயா புரிஞ்சிப்பனு நினைக்கிறேன்….”, ஒவ்வொறு வார்த்தைக்கும் நீண்ட இடைவேளை தந்தாள்.
சொல்லுஎன்பது போல் தலையை கீழே ஆட்டினான்.
“…..நாம ரெண்டு வருசமா எப்பிடி பழகுறோம்னு உனக்கு தெரியும். ஆனா இப்ப…………….  ஐகான்ட்…………..”, தன் பேச்சை விடாமல் தொடர்ந்தாள்.
அவனுக்கு அவளுடைய பேச்சை கேட்க விருப்பம் இல்லை. ஆனாலும் அவன் தன் கண்களை மட்டும் அவளிடமிருந்து எடுக்கவில்லை. அவன் எண்ணமெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே மேஜையில் நிகழ்ந்தஅழகான கொலையை பற்றியே இருந்தது. அந்தநாளில் அவளால் மலர்ந்த அந்த பொன் மாலைபொழுதில் அவர்களுடைய முதல் உரையாடலில் மூழ்கியிருந்தான். அந்த உரையாடலையும் அன்று அவன் தான் தொடங்கிவைத்தான்.
காஃபி??”, அவளை நோக்கியவாறு கேட்டான்.
இல்ல வேணாம்”, என்றவள் சொல்லி முடித்தவுடன் தன் முகத்தை கீழே இறக்கிக்கொண்டாள்.
            ” சரி சொல்லு அச்சிரா
அவளுடைய மொழிகளுக்காக காத்திருந்தான். அவள் தன் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள், பின் வேகமாக தலையை கீழே இறக்கிக்கொண்டாள். அவனுக்கு அது கண்களில் ஈட்டியை வீசியது போல இருந்தது. ஆனாலும் அவனுக்கு அது இனித்தது.
எவ்வளோ நேரம் இப்பிடியே அமைதியா இருப்ப?”
          “ம்ம்ம்…”
          “தென்..”
          “தென்..”
சிறிது அமைதிப் பரவியது.
நமக்கு பிறக்கப்போற குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிறியா?”
அவள் மறுபடியும் தன் தலையைத் தூக்கி, அவளை பார்த்தாள். இந்த பார்வை தொடர்ந்தது. பின் சிரித்துக்கொண்டே தலையை கீழே இறக்கிக்கொண்டாள். அவனுக்கு இதுவே போதும் என்று தோன்றியது.
அது என்னங்க மேடம், அச்சிரானா?”
        “அச்சிரம்னா குளிர்காலம்
அப்ப எப்ப மழையா மாறி என் மேல பொழியப் போறிங்க?”
        “ஹ்ஹ்ம்ம்ம்….. இப்போதைக்கு பனி மட்டும் தான்
பெண்மையும்,  நாணமும் வேறில்லை என்பதை அவள் அந்த பொழுதில் அவனுக்கு உணரவைத்தாள். அவள் பேச்சைக் கேட்ககேட்க அவனுக்கு அவர்களை சுற்றியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக மறைவதைக் கண்டான்.ஒரு கட்டத்தில் அவர்கள் மட்டுமே இருந்தனர்.
அவள் கைகளைப் பற்றிக் கொள்ள ஆசைப்பட்டு, மெதுவாக தன் விரல்களை நகர்த்தி அவள் விரல்களை வருடத்தொடங்கினான். அவள் அருகில் இருந்த மெனுகார்டால், அவன் கையில்பளீர்ரென்று அடித்தாள்.
அவன் சிரித்துக்கொண்டே கையை தன் பக்கம் நகர்த்திக்கொண்டான். பின்பு பல நாட்கள் அவர்கள் இதே மேஜையில் காஃபி அருந்துவர், சில நேரம் அவள் சிரிப்புடன் சில நேரம் அவள் அழுகையுடன்.
அபிலாஷ்”, என்று உரத்தக் குரலில் மூழ்கியிருந்தவனை நிகழ்காலத்திற்கு தூக்கிவந்தாள்.
என்ன நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ எந்த நியாபகத்துல இருக்க
          “சாரி சாரி சொல்லு
           “…………………… தின்க் இட்ஸ் டைம்டூ மூவ் அவே………… லைக் டூலீவ்………………சூழ்நிலையப்பிடி……………உன்ன ஹேட் பன்னிர்ந்த மன்னிச்சுக்க………………..ஜஸ்ட் ஃப்ர்காட் ஆல்………….அண்ட் டோண்ட் தின்க்,  ட்ரையிங் டூ ஜஸ்டிஃபை மைசெல்ஃபு…………………”
அவன் அவளை நோக்கி மெதுவாக தலையசைத்துக் கொண்டேசிரித்தான்.
            “தன்க்யூ….. நான் கிளம்புறேன்”, என்றாள் முகம் கொடுக்காமல்.
             “ம்ம்ம்….”
அவனுக்கு அவள் மீது சிறிதும் கோவம் இல்லை. அவனுடைய அச்சிரா கண் முன்னே மடிந்துப் போனதை எண்ணிக் கவலைக்கொண்டான்.
           ‘இவள் யார், என் அச்சிராவை பற்றிப் பேசுவதற்கு?.......இவள் யார் என் அச்சிராவை மறக்கச் சொல்வதற்கு?’
பாஸ் காஃபிஎன்றார் அவர்கள் காதலுடன் நட்பு கொண்டிருந்த சர்வர்.
நோ பாஸ்என்றவாறே அந்த விடுதியில் தன் கடைசி வருகையை முடித்துக் கொண்டு வெளியேறினான்.