Sunday 26 January 2014

கனிமொழி


                                         கனிமொழி
            ஹலோ, சொல்லுடி
            இவ்ளோ  நேரமா  போன்  பன்றேன்  ஏன்  எடுகல???”
            இன்னைக்கு  எங்க  டிப்பாட்மண்ட்  ப்ரபஸர்ஸ்  மீட்டிங்.  அதான்  அடன்  பண்ண  முடியலடி.  என்ன  விசயம்  சொல்லு
             ஒன்னும்  இல்ல  இன்னைக்கு  காலேஜ்ல  க்ளாஸ்  சீக்கிரமா  விட்டாங்க,  உங்கள்ட  பேசனும்னு  தோணுச்சு  அதான்  கால்  பன்னேன்
               இப்ப  கொஞ்சம்  வேலையா  இருக்கேன்.  அப்புறம்  கால்  பன்றேண்
               ஆரம்பத்துல  தினம்  போன்  பன்னி  பேசிக்கிட்டே  இருப்பிங்க   இப்ப  நா  கால்   பன்னாக்கூட   எடுக்க   மாட்றிங்க.  ஒவ்வருதடவையும்  ஒரு  சாக்கு  சொல்றிங்க.  நீங்க  பழைய   மாறி  இல்ல.  இப்ப   என்ட  சரியாவே  பேசுறதுல்ல
                அப்டி  எல்லாம்  ஒண்ணும்  இல்ல  செல்லம்.  பத்து  வருசத்துக்கு  முன்னாடி  உன்ன  நம்   ஊர்   மந்தைல  பாத்ததுல   இருந்து   இப்ப   வர   உன்ட   பேசிக்கிட்டே   இருக்கனும்னு    தான்   தோணுது   புஜ்ஜிமா
                இதுக்கு   ஒன்னும்   கொறச்சல்  இல்ல.  இப்டி   பேசி   பேசியே   என்ன   கவுத்துட்டிங்க
                நீவேனா   பாரு  உன்  வாழ்க்க  புல்லா  உன்ட  கொஞ்சி கொஞ்சி  பேசிக்கிட்டே   இருப்பேன்
                “(சிரிப்பு)”
            என்டி  திடிர்னு   சிரிக்கிற?”
           ஒன்னுல்ல  போன   வருசம்  நம்ம   ஊர்   திருவிழால  பொண்ணுங்கல   வேடிக்க  பாத்ததுக்கு  என்ட  கொட்டு   வாங்குனிங்கல  அத  நனச்சேன் .  சிரிச்சேன்……..  வைங்க  வைங்க  அப்பா   கால்   பன்றார்.  நான்  அவர்ட   பேசிட்டு   கூப்டுறேன்  (பயத்துடன்)”
            ஹலோ   சொல்லுங்கப்பா
           என்னமா    போன்    பன்னா    பிசினு    வருது   யார்ட்ட    பேசிக்கிட்டு   இருந்த?”
           சித்தி   பேசுனாங்கப்பா
           சித்திட்ட   தான்   பேசினியா?    இல்ல   உன்    பின்னாடி    சுத்துறானே    அந்த   சக்லிய பயட்ட    பேசினியா?”
           இல்லப்பா   சித்திட்ட   தான்   பேசுனேன்
            இங்கபாரு   அந்த   பயக்கூட   பேசுறது   தெரிஞ்சிச்சு  அப்புறம்  நா   மனுசனாவே   இருக்க   மாட்டேன்.  உனக்கும்   நம்ம   சாதி   கட்சி   தலைவர்   பையனுக்கும்   அடுத்த   மாசம்   கல்யாணம்.   நாளைக்கி  உன்ன   பொண்ணு   பாக்க   வராங்க  ஞாபகம்   வச்சுக்கோ   போன  வை
            ம்ம்  சொல்லுடி   என்ன  சொன்னார்  என்   மாமனாரு?  மாப்பிள்ளையப்  பத்தி  விசாரிச்சாரா?”
             “(அழுகை)”
         என்னடி?    ஏன்டி  அழுற
          “(அழுகை)”
         அழுகாத   என்னனு  சொல்லு
         அடுத்த  மாசம்…………   எனக்கும்     எங்க   ஜாதிக்  கட்சி   தலைவர்    பையனுக்கும்    கல்யாணமாம்.   நாளைக்கி  என்ன   பொண்ணு  பாக்க   வராங்கலாம்.   எனக்கு   பயமா   இருக்குங்க.  நாம   எங்கயாவது     போயிருவோம்
          நீ  ஒன்னும்   பயபுடாத   நாம   என்ன   செய்ய    கூடாத   தப்பா   பண்டோம்.   ஓடி   ஒழியிறதுக்கு.    நா   நாளைக்கி   உங்க   வீட்டுக்கு   வந்து   உங்கப்பாட்ட  பேசுறேன்.  நீ    அழுகாம   இரு.  என்ட  படிப்பு  இருக்குது,  நல்ல  வேல   இருக்குது.  கண்டிப்பா   உங்க   அப்பா   நம்மல   எதுக்குவாறு
         நாளைக்கி   கண்டிப்பா   வந்துருங்க
         என்  உயிறே   போனாலும்   நா   வந்துற்றேன்.  சரி   வச்சிற்றேன்.   அதுக்கு   முன்னாடி   ஒரே   ஒரு   உம்மா   குடுடி
         எங்க
           எங்கயாவது.  உன்  இஷ்டம்
            சரி . உம்ம்ம்மா
           எங்கடி   குடுத்த
            அது   சொல்லமுடியாது.  நாளைக்கி   நேர்ல   சொல்றேன்
       சரி  சரி   நா   வச்சிர்றேன்
       
                  இன்னு   எத்தன   நாளுடி   இப்புடி   அழுதுக்கிட்டே    கடப்ப.   உன்ன   பொண்ணு   கேக்க    வந்த   அந்த   சக்கிலிய   பயல    வாசல்ல   வச்சே  உங்கப்பா    வெட்டி   கொன்னுப்புட்டாரு.   இப்ப   ரெண்டு   வருசமா    ஜெயில்ல   கடக்காரு.  என்   வயித்துத   பொறந்த   பாவத்துக்கு   இந்த   வாசல்லையே    கடந்து   அழுது   அழுது   சாகனும்னு   உன்   தல   விதி   அய்யோ அய்யோ…………”
                 எதுவும்   அவள்   காதில்   விழுவதில்லை.   கடைசியாக   அவன்   இறப்பதற்கு   முன்   தினம்   பேசியதை   நினைத்துக்  கொண்டே   வாசல்   கதவில்    சாய்ந்து   அவன்   இரத்தம்  படிந்த  படியை   பார்த்து    அழுதுக்  கொண்டே    இருந்தாள்   கனிமொழி.

No comments:

Post a Comment