நான் தொலைத்தவை
மங்கிய நிற கட்டடங்களுக்கு நடுவில் உள்ள சைக்கிள் நிறுத்தம், இரும்பு ஜென்னல்கள், வெள்ளையில் பச்சை கோடு போட்ட சட்டை, கரும்பச்சை நிற கால்சட்டை , சிகப்பு பட்டை கயிற்றில் கலுத்தில் தொங்கும் அடையாள அட்டை, “கடைசி ரெண்டு பென்சும் உருப்படாத கழுதைக” என வாங்கிய பட்டம், டிபன் பாக்சை எடுத்து வைத்து கொண்டு “ என்ன மாப்ல இன்னைக்கு சாப்பாடு கொண்டு வரலையா???? என கதறவிடும் நண்பன், வாய்விட்டு சிரித்த வகுப்புகள், கெவலமாய் பெயிலான காலாண்டு மறுதேர்வு , அடுத்த முறையாவது தேற வேண்டும் என பேப்பரை எல்லாம் மாற்றி அருகில் உள்ளவனிடம் பிட்டை வாங்கி எழுதி வங்கிய “ஜெஷ்ட் பாஸ்” , இந்திராநகர் பள்ளி மைதானம்,
சனிக்கிழமையானால் பிக் சினிமா கனேஷ்ல் பார்த்த ஹாலிவுட் படங்கள், பிரேக் இல்லாத சைக்கிளில் பந்தயம், பள்ளிக்கு முன்னால் உள்ள வேகதடை , சென்.ஜோசப்
பெண்கள் பள்ளி மாணவிகள், பழைய குயவர்பாளையம் சாலை, சென். மேரிஸ் சர்ச், தெற்குவாசல் சிக்னல், மினாட்சி தியேட்டர், தெரு ஓர சினிமா போஸ்டர், மதுரை – இராமேஸ்வரம் ரயில்வே ட்ராக், கிருதுபால் நதி கால்வாய், பெல் அடித்தவுடன் விலகும் பன்னிக் கூட்டம், சாக்கடையில் முங்கி கடந்தாலும் அழகாய் திரியும் வெள்ளை பன்னிக் குட்டி என இன்னும் எத்தனை உறவுகள் இறந்தகாலம் என்னும் எதார்த்த்தில் குடியேறிவிட்டன.
No comments:
Post a Comment