”செல்லம் யாராவது உன்னோட
பெயர் என்னனு கேட்டா,
‘மை நேம் ஸ்……..’னு
சொல்லனும் சரியா?”
“குட் மார்னிங் மம்மி”
”உன்னோட பிள்ளைய
இங்கிலீஷ் மிடியத்துல படிக்கவை,
அப்ப தான் உருப்புடும்”
“அப்பா நா பி.ஏ தமிழ் படிக்கப்போறேன்”
“அத படிச்சு வேல கெடக்காம
தெருதெருவா அலயப்போறியா?”
”ஏன்டா இஞ்னியரிங் படிக்கிற
பேங்க்ல தமிழ்லயா லெட்டர்
எழுதுவ? உன்னெல்லாம்
படிக்கவச்சு என்ன பிரயோசனம்”
”ஐ லவ் யூ டி”
“ரெண்டு நிமிஷம் இங்கிலீஷ்ல
பேசுறதுக்கே மூச்சு வாங்குது உனக்கு,
வெள்ளக்காரன் எப்புடி திக்காம
இங்கிலிஷ் பேசுறான் பார்”
“உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக
மாற வேண்டுமா? இன்றே சேருவீர்
Success Spoken English Centre”
”தெனோ ஹிந்து பேப்பர் படி
அப்ப தான் கொஞ்சமாவது
மூள வளரும்”
“பிரபல பல்கலைகழகத்தில்
தமிழ் மொழி ஆய்வகத்தை
மூட முடிவு”
“நாங்க *****டிவில இருந்து வறோம்
உங்களுக்கு பிடிச்ச தமிழ்எழுத்தாளர்
யார் “
“ம்ம்ம்ம்………… பாரதியார்”
பத்திரிக்கை செய்தி (கடைசி பக்கம்):
தமிழ்மொழி குறித்து சிறப்புகட்டுரைகள்
அடங்கிய நூல்கள் அறிமுகம் செய்யும்
நிகழ்ச்சி தமிழறிங்கர்களால் நேற்று நடத்தப்பட்டது.
பத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள்
இதில் கலந்துக்கொண்டனர்.
பத்திரிக்கை செய்தி (முதல்பக்கம்) :
பல்கலைக்கழகத்தில் மீண்டும்
தமிழ்ஆய்வகத்தை துடங்காவிட்டால்,
தமிழ் பற்று நிறைந்த தமிழ்நாட்டு மக்களை
ஓன்றுத்திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக
பிரபல அரசியல்வியாதி சூளுரை.
No comments:
Post a Comment