Monday 12 May 2014

மூன்றாம் துருவம்



                                    அந்த ரயில் பெட்டியில் சில இருக்கைகள் தவிர அணைத்திலும் ஆட்கள் அமர்ந்திருந்தனர்.  ஜன்னல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி
மாமா அரவாணி வந்துருக்கேன்காசு குடு
                   ஏ போ அங்கிட்டு சனியன்
ஏன் மாமா கொச்சிக்கிற?”
                  இந்தா பத்து போய் தொல
                  சரி வரேன் மாமா
பத்தை வாங்கி மார்பு சட்டைக்குள் புதைத்துக் கொண்டாள். அருகில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும் அவள் மகனும் அமர்ந்திருந்தனர்.  அவர்களை பார்த்து
                 அரவாணி வந்துருக்கேன் காசு குடு
அவள் கேட்பதை பார்த்து பயந்துப் போன பெண்மணி, பையில் இருந்து இரண்டு பத்துரூபாய்நோட்டுகளை கொடுத்து விட்டு ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள். பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து  சென்றுவிட்டாள். அவளை மற்ற  பயணிகள் வினோத்ததை பார்ப்பது போல் வேடிக்கை பார்த்தனர். அதை அவள் கவனிக்கவில்லை.
                   மாமா அரவாணி வந்துருக்கேன் காசு குடு
காசு தரேன்ஆனா மாமாவுக்காக ஒரு டான்ஸ் ஆடனும்
                    போ மாமா காசு குடு
அவள் கையை பிடித்துத்திருகினான்.
 “விடுநீ காசு குடு”  என்று கையை உதறினாள்.
சட்டையில் இருந்து ஐந்துரூபாய்யை கொடுத்தான்.
அந்த பெட்டியின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த இருபதுவயது மதிக்கத்தக்க இளைஞன், அங்கு நடப்பதையே கவனித்துக்கொண்டிருந்தான். அவனை கடக்கும் போது, அவளை வழி மறித்தான்.
என்ன மாமாகாசு குடு
இளைஞன் அவள் கையை பிடித்துஆள் நடமாட்டம் இல்லாத கழிப்பறை பக்கம் இழுத்து சென்றான்.
ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்குறிங்கஉங்களுக்கு என் அக்கா வயசுதான் இருக்கும். உங்கள என் அக்காவா நனச்சு சொல்றேன். இனிமே பிச்சை எடுக்காதிங்க அக்கா
சிரித்தாள்.
                       அப்ப சாப்பாட்டுக்கு தம்பி
                      “உடம்ப வச்சு உழைச்சு சாப்புடுங்க
உடம்ப வித்து சாப்புட சொல்றியா?”
பிச்சை எடுக்குறதையும், இதையும் தவர வேற எதாவது வேல பாருங்க. நான் கடை தெருல தான் இருக்கேன்.அங்க எத்தனகட இருக்கு அங்க வேல தேடிருக்கிங்களா? இல்ல வேற எங்கயாவது தான் போய் வேல தேடிருக்கிங்களா?”
இல்ல தம்பிஎன்று வெட்கி த லைகுனிந்தாள்.
                       வேல தேடிப்பாருங்க. கெடைக்கலனா மறுபடியும் பிச்சை எடுங்க. நானும் காசு தரேன்
அவள் எதுவும் பேசாமல் அல்லது பேச முடியாமல் அங்கு இருந்து சென்றுவிட்டாள்.
மறுநாள் காலை கடைதெருவிற்க்கு சென்றாள். ஒரு ஜவுளி கடை கண்ணில் பட்டது.  அதற்குள் நுழைந்தாள். அவளை பார்த்தவுடன் அங்கு நின்றிருந்தவன் அவளை நோக்கி வேகமாக வந்தான்.
                        ஏ நீ எதுக்கு இங்க வந்த யாருயா இதை யெல்லாம் உள்ள விட்டது
                      சார் ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க சார்
காலைல கஸ்டமர் வர நேரத்துல நீ வந்து தொலச்சுருக்க.  இன்னும் மொத போனியே ஆகலஅப்புறம் வா காசு போடுறேன்
சார் நா காசு கேக்கல சார்இங்க ஏதாவது வேல இருந்தா குடுங்க சார்
என்னது வேலையாஇது ஜவுளிகடை. இங்க உனக்கு என்ன வேல குடுக்குறது?  அந்த மாறி எடத்துல தான் உன்ன சேப்பாங்க.  இந்தா பத்து மொத எடத்த காளிப் பன்னு” 
காசு வேணா சார்வேல தான் வேணும்” 
வேல எல்லாம் உனக்கு கடையாது போ போ                           
அடுத்ததாக ஒரு குடவுனுக்குள் நுழைந்தாள்.  யாரும் இல்லை.  கடைசியாக ஒரு அறையில் ஒருவன் இருந்தான்.  அறைக்குள் நுழைந்தாள்
                     சார் எதாவது வேல வேணும்” 
அவன் எழுந்து அவள் அருகில் வந்தான்
என்னது?”
                   வேல வேணும் சார்
அவன் அவள் கன்னத்தை கிள்ளினான்.  அவள் தட்டி விட்டாள்
                    பார்ரா
அவள் இடையை கையால் பற்றி பிசைந்தான்.
                     ச்சீ விடு சனியனே
கதவைபடார்என சாத்திவிட்டு கோவமாக வெளியேறினாள்.
அடுத்ததாக ஒரு ஹோட்டலில் நுழைந்தாள். கல்லாபெட்டியை நோக்கி நடந்தாள். அங்கு ஒரு குடும்பம் நின்றுக்கொண்டிருந்தது. அவர்கள் அருகில் போய் நின்றாள். அவளின் உயரமான உருவத்தையே பார்த்தார் போல் குழந்தை இருந்தது.  அப்போது அதன் தந்தை,
நீ குழந்தைய கூட்டிட்டு போதம்பி அங்க பாக்கக்கூடாது போ. வேகமா போ
ஏ போ அப்புறம் வாஇங்க நிக்காத கிளம்புஎன்றான் கல்லாப்பெட்டிக்காரன்.
ஐயா இங்க எதாவது வேல இருந்தா குடுங்கையாபாத்திரம் கலுவுறது,  கூட்டு தள்ளுறது இந்த மாதிரி எதுவா இருந்தாலும் குடுங்கையா. நா செய்வேன்
உனக்கு எல்லாம் வேல தர முடியாது.யோவ் இத பிடிச்சு வெளில போடுங்கய்யா
அவளை தள்ளி தெருவில் போட்டனர்.
தெருவில் போடப்பட்டவளை தூக்கிவிட்டான் ரயிலில் பார்த்த அந்த இளைஞன்.
                               சாரிக்கா நான் சொன்னத கேட்டனால தான் இவ்வளவு அவுமானம் உங்களுக்கு
அதுக்காக மறுபடியும் பிச்சை எடுக்கசொல்றியாஇத்தன நாளு நான் தான் கேவளமானவள்னு நனச்சேன்.  இப்பதான் தெரியிது என்ன விட கேவளமானவுங்கல்லாம் என்ன சுத்திதான் இருக்காங்கனு நா போனாலே பிச்சை எடுக்க வந்துருக்கேன்னு தொறத்துராங்ககண்ட எடத்துல கைய வச்சு தடவுறானுங்க,  பிசையுறானுங்க. ச்சீ அந்த தேவுடியா நாயு.  கருமம்பிச்சை எடுக்குறதையும், படுக்குறதையும் தவர எனக்கு எதுவுமே தெரியாதுனு அவுங்களே முடிவு பன்னிக்கிறாங்க. குழந்தைகள் என்ன பாக்ககூடாதாம். நா என்ன அழுகின பிணமா? இத்தனை நாள் இந்த கேடு கெட்ட மனுசனுங்க கிட்டயா பிச்சை எடுத்தோம்னு நனைக்கும் போது உடம்பு கூசுது. என்ன மனுசியா கூட மதிக்காம ஆடு மாடு மாதிரி அது, இதுனு கூப்புற்ற இந்த நாயிக மத்தில நா கேவளமான ஜென்மமா படுறேன் இந்த சமுதாயத்துக்கு. இனி இந்த எளவெடுத்த நாயிக முன்னாடி நான் கெளரவமா வாழ்ந்துகாட்டுறேன். எனக்கு தம்பினு ஒரு சொந்தம் நீ கடச்சியே அது போதும் தம்பிநா வரேன். ஆனா ஒரு நாள் நீ என்ன நனச்சு பெருமபடுவ தம்பி
அவள் சென்றாள். அவன் தலை குனிந்து நின்றான், இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் அருவருக்கத்தக்க செயலுக்காக.



                                                    இந்த சமுதாயம் சில இடங்களில் தூய்மையாக தெரிந்தாலும் , பல இடங்களில் மிகவும் அருவருப்பான சாக்கடையாகதான் இருந்தது,  இருக்கிறது. பெரும்பகுதியினர் அந்த சாக்கடையில் தான் மிதக்கின்றனர்அவர்கள் அதை தான் தூய்மை என்று மிதப்பில் இருக்கின்றனர். மேலும் அவர்களுடன் சேராத அல்லது அவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது உண்மையில் தூய்மையாக இருப்பவர்களை அருவருப்பான சாக்கடையாக பார்க்கின்றனர். ஆனால் தூய்மையானவர்கள் அவற்றை பற்றி கவலைபடுவது இல்லை எப்போது தூய்மையாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்


No comments:

Post a Comment