Wednesday 7 May 2014

என் ராஜா


                                   என்  ராஜா
ழையிரவு,
உறைய வைக்கும் குளிர்,
தூரத்தில் மங்கிய மின்விளக்கு,
ஜென்னல் அருகே சாரல்,
போர்வைக்குள் நான்,
காதருகே  ராஜா ……………

ணமாகாமலேயே
படுக்கையில் சுகம் அனுபவிக்கின்றேன்,
இசைவாங்கி வழியாக
 ராஜாவிடம் இருந்து…………

விட்டுப்போன அவள்
எப்படி
என்னிடம் வந்தாள்?
என் தோள் சாய்ந்தாள்??
என்னிடம் பேசினாள்???
என்னிடம் சின்ன சண்டையிட்டாள்????
ஆஹா அழைத்து வந்தது
 நீ  தானே  
ராஜா…………

நானா??
மழையில் நனைந்துக்கொண்டுடிருக்கிறேன்,
அட என் மேல் ஈரம் இல்லை?
மன்னிக்கவும்
ஆகாயத்தில் உலாகிக்கொண்டிருக்கிறேன்,
அட என் கால்கள் தரையில் உள்ளன?
மன்னிக்கவும்
இரண்டையுமே செய்து கொண்டிருக்கிறேன்,
எப்படியா?
பாடிக்கொண்டிருப்பது ராஜாவாச்சே…………….

லோ ராஜா
நீ ஒன்றும் இசைக் கடவுள் இல்லை.
ஏன்??
நீதான் எப்பொழுதும் எங்களுடனே
இருக்கிறாய்,
பேசுகிறாய்,
சிலரை நினைவூட்டுகிறாய்,
உணரவைக்கிறாய்,
அழுகவைக்கிறாய்,
அரவணைக்கிறாய்,
பின்பு எப்படி இல்லாத ஒன்றாக
உன்னை கருதமுடியும்…….

தைவிடு  இப்போது எனக்காக
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
படலை பாடப்போகிறாயா இல்லையா??

-       அரவிந்ராஜ் ரமேஷ்











No comments:

Post a Comment