Sunday 4 May 2014

என்னத்த சொல்றது?

                   என்னத்த சொல்றது?
              
             என்னத்த சொல்றது? எல்லாத்தையும் நனச்சாலே நெஞ்சு கனக்குது. அந்த கொத்தன் தெரு எங்க ஐயா,  அதாண்டா உங்க தாத்தா வீடு இருந்த தெரு.  சொந்த வீடு. விசாலம இருக்கும். சும்மாவா ஆறு பொம்பள பிள்ளைகள் பெத்தா வேணாமா? ஆனா ஒன்னு எல்லா பிள்ளைகளையும் ஒரு கொறையும் இல்லாம உங்க தாத்தா வளத்தார். உங்க அம்மாச்சி  அதாண்டா என்ன பெத்தவ எல்லா பிள்ளைகளையும் ஒன்னா தான் பாத்தா. எங்க ஐயாவோட நாங்க பத்திரகாளி கோயிலுக்கு போறத ஊரே கண்கொட்டாம பாக்கும். எல்லா கொழுந்தைகளையும் சீரிசிங்காரிச்சு கைய புடிச்சு நடத்தியே கூட்டிப் போகும் உங்க அம்மாச்சி.  எங்க எல்லாருக்கும் ஐயா மேல அம்புட்டு பயம். அதவிட மரியாத நறையா. நான் மூத்தவங்றனால பத்தாவதோட படிப்ப நிப்அம்மாச்சிடு வீட்டுல ஒத்தாசைய இருந்தேன். அப்டியே ரெண்டு வருசம் ஓடிடுச்சு. என்னத்த சொல்றது? அப்பதான் வந்தாரு சிவ ராமகிருஷ்ணன். சிவகாமி அத்தையோட தூரத்து சொந்தம். அதாண்ட புதுத்தெருவுல ஒரு கூனு அம்மாச்சி இருக்கே. வட நாட்டுல ஏதோ இன்ஜினியருக்கு படிச்சவரு. பாக்க கொலு கொலுனு இருப்பாரு. அவர கண்டாலே எங்க தெரு பொண்ணுங்களுக்கு ஒரு பித்து. எனக்கும் தான். ஆன அவரு என்ன ஏற்றெடுத்து கூட பாக்க மாட்டாரு.  என்னத்த சொல்றது?  அன்னைக்கு ஒரு நாள் என் தோழி கெளரியோட சேந்து அவரு கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ஹஹம்ம்ம்….. கெளரி  இப்ப எங்க இருக்காலோ? யாரு கண்டா?  அந்த நேரம் பாத்து எங்க ஐயா அத பாத்துட்டாரு.  காத பிடிச்சு தரதரனு இலுத்துட்டு வந்து வீட்டுல போட்டு அடி வெளுத்துட்டாரு. “மூத்தத வீட்டுல போட்டது எவ்வளவு பெரிய தப்புனு இப்பதான் தெரியுதுனு எங்க அம்மாவ  ஏசுஏசுனு ஏசுனார்.  ராமு மாமாட்ட சொல்லி அவசர அவசரமா கல்யாணத்துக்கு பேசி முடிச்சிட்டாரு எங்க ஐயா.  ஒரு மாசம் என்ன வீட்டுலயே அடச்சு போட்டுட்டாரு. அது அந்த வயசுல வந்த ஒரு சின்ன சலனமே தவர வேற ஒன்னுமில்ல. கல்யாணத்தன்னக்கி தான் உங்க  அப்பா மொகத்தையே பாத்தேன். அன்னைக்கி ராத்திரியே ஒன்னுவிடாம சொல்லி  அவரு கால்ல சாஷ்டாங்கம்மா விழுந்துட்டேன். அவரு கோவப்படல மூஞ்ஜிக்கூட கோணல. என் கண்ணீர தொடச்சு ஒரு தெய்வீக பார்வ பாத்தாரு பாரு. அந்த பார்வயே எனக்கு சொல்லிக்குடுத்துருச்சு அவரு தான் என் தெய்வம்னு. என்னத்த சொல்றது?  ஒரு நாள் ஒரு பொழுது ஒரு வார்த்த ஒரு வார்த்த அத பத்தி அவரு பேசுனது இல்ல. கல்யாணமாகி இந்த இருவது வருஷமா என் மூஞ்ஜி கோணுற மாதிரி  அவரு நடந்தது கிடயாது. வீட்டுல சாப்பாடு கூட என் விருப்பப்படியே வச்சுக்க சொல்லுவாரு. என்ன கேட்டாலும் சிரிச்ச மொகத்தாட வாங்கி தருவாரு. பொக, தண்ணீனு எந்த கருமமும் கிடயாது. எனக்கு உடம்பு முடியலனா அந்த மனுசனுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. பக்கத்துலையே உக்காந்து என்ன கவனிச்சுப்பாரு. தெய்வம்ன சும்மாவா? உன்ன பெத்து அவரு கைல கொடுக்கும் போது. அவரு கண்ணுல நா பாத்த ஆனந்தம் இருக்கே. அப்பவே அவரு கால்ல சரணாகதி ஆய்டலாம்னு தோணுச்சு. என்னத்த சொல்றது? ஒரு நாள் கூட அவரு என்ன கண்கலங்க விட்ட்து இல்ல. இப்ப என்ன இப்பிடி கதறவிட்டு ஆஸ்பத்திரி படுக்கைல பேசுமூச்சு இல்லாம படுத்துகடக்கார். இவர ஏத்துன அந்த லாரிகார நாயி கட்டைல தான் போவான். நாசமாத்தான் போவான்.  இவருக்கு ஒன்னும் ஆகாது. பத்திரகாளி காப்பாத்துவ எத்தன நாள் அவள கும்புட நடயா நடந்துருக்கேன். இல்லன அவளுக்கு இருக்கு. நீ ஒன்னும் கவலபடாத அப்பாவுக்கு ஒன்னுமில்ல

No comments:

Post a Comment