Sunday 1 June 2014

இரண்டுகால் ஜந்து

             

நெற்றியில் குறிகளிட்டு கோயில் கொண்டாட்டங்களில் குவியென்றனர்,
பெருமாள்முன் அணைவரும் ஒன்றெயென்றனர்,
இல்லாதவன் இலவசதரிசனத்தில் நிற்க,
இருக்கிறவர்கள் மட்டும் இருநூறுரூபாயில்
கொல்லைப்புறம் புகுந்தனர்,   
கோயில் பிரகாரத்தில் ‘திருடர்கள் ஜாக்கிரதை’
என்று சாத்தான் வேதம் ஓதினர்.
பூனல் போட்டவர் கால் கலுவு,
சந்தணமிடு,
தொட்டு வணங்கி,
கை கூப்பி,
தலைகுனிந்தே இரு என்றனர்.
மந்திரம் விற்றால்
‘அவர்’ ரென்றனர்,
மலம் அள்ளினால்
‘அவன்’ னென்றனர்,
’செய்தொழில் வேற்றுமை இல்லை’ என்று வள்ளுவன் மொழி ஒப்புவி என்றனர்,
குப்பை அள்ளுகிறவர்களை பார்த்தால்
எட்டியே நட என்றனர்,
மாலைகளிட்டு திரைநாயகர்களுக்கு
மரியாதை செய்தனர்,
தமிழர் நாம் தமிழர்
என்று திமிரினர்,
பிறகு யார் அந்த
பறையர்?
துளுக்கர்?
கல்லர்?
தேவர்?
பிள்ளை?
இன்னபிற என்றேன்?
பதிலாக பல்லை காட்டினர்,
ஆறாவது அறிவு
மனிதனுக்கு மட்டும் தானென்றனர்,
பின்னேன் பொய்களூட்டப்பட்ட
கல்லுக்கு பாலென்றேன்
மூடு உன் வாயையென்றனர்,
இராப்பசிக்கு பெண்னை கட்டினர்,
பகல் பசிக்கும் சேர்த்து அவளப்பன்
உழைப்பை கேட்டனத்தினர்,
கற்க கசடற வென்றனர்,
எதையும் கற்காமல்
கறைத்து மட்டுமே குடித்தனர்,
அழிவில்லாதது கல்வி என்றனர்,
அதை வைத்துக்கொண்டே
பணப்பிசாசுகளின்
காலில் விழுந்துகிடந்தனர்
ஊர்வாயை பிளக்கவைக்கும்
உபரிச்சொத்தின் அளவைப்பெருக்க,
தனக்கு கற்பிக்கப்பட்டதையே
எனக்கும் கற்பித்தனர் அதை
கொஞ்சம் கூட ஆய்வுக்கு உட்படுத்தாமல்.
நாமாவது ஆய்வுக்கு உட்படுத்த முனைந்தால்
வயிற்றுப் பிழைப்பை பாரென்றனர்,
நாமும் உண்டு கழித்து
புணர்ந்து ஈண்டு மடியும்
நாலுகால் ஜந்துக்களென்றெண்ணி.
                               -  அ ரா





No comments:

Post a Comment