Sunday 26 January 2014

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்



பெண்மையடைந்த சில வருடங்களில் அவளை சாயம்பூசி பல கோணங்களில் படம் பிடித்து தரகரிடம் கொடுத்து அதை ஊர் ஊராக சுற்ற விட்டு அது பல ஆண்கள் கைபடவைத்து அவர்கள் வருங்காலஇன்பங்களுக்கு மனதில் சில ஒத்திகை பார்த்து அதில் ஏவரேனும் ஒருவர்  திருப்தி கண்டுஅதை தரகரிடம் சொல்லி அனுப்பி ஒரு நாள் அவளை அலங்கரித்து திருப்தி கண்டவர்முன்பு நடை உடை பாவனத்தை செழுமையாய் காட்டி அவர் சம்மதம் தெரிவித்தவுடன் பொண்டாட்டிக்கு சோறுபோடகூட வக்கில்லாதவன் போல 80 சவரன் , 5 லட்சம் ரொக்கம் , வீட்டு உபகரணங்கள் அணைத்தையும் திமிராக பிச்சைக் கேட்க பெண் வீட்டார் அதை முடிந்த வரை குறைவாய் பேரம் பேசி தன் வீட்டை அடமானம் வைத்த பணத்துடன் பத்து வருடங்களாக பகையாய் இருக்கும் தன் சகோதரனிடம் மானம் கெட்டுப்போய் 2 லட்சம் கடன் வாங்கி ஒருவழியாக மாப்பிள்ளை வீட்டாரின் ஆடம்பர அலும்புகளுக்கு இசை பாடி காசை செலவழித்து சம்மந்தி கல்யாண பத்திரிக்கைல எங்க அப்பா பேர்ர மேல பெருசா பொடுங்கஎன்ற மாப்பிள்ளை அப்பா பேச்சை கேட்டுகொண்டு  மணமேடை வரை கொண்டு வந்துஎனக்கு கல்யாணம் வேணாம்பா நான் படிக்கனும்பாஎன்று கதறிய மகளுக்குநம்ம சாதில இதவிட கொரச்சு யாரும் வரதட்சன வாங்க மாட்டாங்கமா உன் கால்ல வேணா விழுறேன்என அவளை அடக்கி மந்திர விற்பானர்கள் ஓத மாப்பிள்ளை அம்மா முகம் சுளிக்காமல் இருக்கவும் மாப்பிள்ளையின் தாய்மாமா கத்திரிக்கா கூட்டில் சொல்லிய குறையை சரி செய்யாவும் பெண்னின் அப்பா கையை நெச்சில் வைத்து கொண்டு ஓட மாப்பிள்ளை ஒரு கயிற்றை அவளுக்கு கட்டி அன்று இரவே அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறியகூட விரும்பாத மாப்பிள்ளை பத்து மாத பணிக்கு கட்டிலில் அச்திவாராம் போட அவன் பல நாள் பசியின் மேய்ச்சலை உடலை கல் ஆக்கி அதை அவளும் அனுபவிப்பது போல பாவனை செய்து அவன் சலைக்கும் வரை சடலமாய் இருந்து உதவி புரியும் சுப நிகழ்ச்சிக்கு பெயர் தான்பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
            

No comments:

Post a Comment