Saturday 7 February 2015

ஓவியம்

நான் பத்தாவது படிக்கும் பொழுது, பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு குடும்பம் குடித்தனம் வந்தது. முன்பு அக்கிரஹாரத்துத் தெருவில் இருந்தவர்கள். அவர்களுக்கு கல்லூரி இறுதியாண்டில் படிக்கும், காயத்ரி என்கிற மகள் இருந்தாள். பார்ப்பவர்கள் சொக்கும் வண்ணம், வெள்ளையும் பலுப்பும் கலந்து பலுங்கி நிறத்தில் இருப்பாள். மேலும் மூக்குத்தி பிதானமாக, அதாவது அதை மையப்படுத்தி வரையப்பட்ட முகம் போலிருக்கும். கன்னங்கள் வசிகரமான அளவுடன் இருக்கும். அதற்கு நெய்யும், தயிரும் முதற்க்காரணமாக இருக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் அவள் வீட்டில் ஸ்லோக வகுப்புகள் நடக்கும். என் நன்பர்கள் பெருமாலுக்கு படைக்கப்பட்ட நெய்வேத்தியத்திற்காக செல்வர். நான் அவளை காணச்செல்வேன். காரணம், அவள் சரஸ்வதி சிலைக்கு முன் சாஷ்டாங்கமாக அமர்ந்து, ஸ்லோகங்களை ஒரே ராகத்தில் பாடுவாள். அப்போது அவள் முக அசைவுகளில் உள்ள ஈர்ப்பு, அவளுடலில் முகத்தைத் தவிற வேறு எதையும் காணவோ, ரசிக்கவிடாது. பாடும்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும். பின்பு நான் மேல்நிலைப் படிப்புக்காக வெளியீர் சென்றுவிட்டேன். அவள் முகத்தைப் பற்றி என்னுள் கொஞ்சகாலம் சிலாகித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் வரும் பொழுது அவளை பார்ப்பேன். சிரிக்கும் பொழுது, குவிந்து எழும் கன்னத்தின் வசீகர அளவில் எந்த மாற்றமும் அவள் செய்திருக்கமாட்டாள். மேல்நிலையிரண்டாம் ஆண்டில் நான் வீட்டிற்கு வரவில்லை. இரண்டாமாண்டு தேர்வை முடித்தப்பின் தான் வீடுவர முடிந்தது. அன்று அவள் வீட்டில் விஷேசம் என்பதாள், நான் சென்றிருந்தேன். அவள் சதுரமான முகத்தில் பலப்புதிய வசீகரங்கள் முளைத்திருந்தன. நெற்றிப்பொட்டிலும், தலையுச்சித் தொடங்கும் இடத்திலும் குங்குமத்தின் செம்மை ஆக்கிரமித்திருந்தது. வெற்றுநெற்றியை விட இது அவள் முகத்தை ருசிகரிக்கச்செய்தது. வண்ணங்கள் புகுந்த கோலம் போல இருந்தது. பின் அவளை பார்க்கவில்லை. முப்பது ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் அவளுடை திருமணத்தின் பின்னான முகம், நம்மை மயக்கிவைத்த ஓவியம் போல எனக்கு ஒரு சுழியும் மாறாமல் நினைவிருக்கிறது.........

No comments:

Post a Comment