Friday 27 June 2014

சூதுயியல்


                  “வணக்கம்சார்” என்று கைக்கூப்பிய வாரே குளிரூட்டப்பட்ட கல்லூரி முதல்வர் அறைக்குள்ளே நுழைந்தார்.
தேய்காத வெள்ளை சட்டையும் வேட்டியும், கலுத்தில் துண்டும் அவர் கிராமத்துவாசி என்று கூறியது.
                  “வாங்க வாங்க ஏன் நிக்கிரீங்க. உக்காருங்க”
                  “இருக்கட்டும் சார்”
                  “அட உக்காருகனு சொல்றேன்ல”
 தன் மகனை இருக்கைக்கு அருகில் நிற்க வைத்துவிட்டு தயக்கத்துடன் நெழிந்தவாரே அமர்ந்தார்.
“சொல்லுங்க என்ன விசயம்? பையன காலேஜ்ல சேக்கனுமா?”
“ஆமா சார். எங்க அத்தாச்சி மவே இங்க தான் படிச்சான். இப்ப எங்கயோ வேல பாக்குறான். அதான் இவனையும் இங்க சேக்கலாம்னு வந்தேன். பையன் நல்லா படிப்பான். இப்ப பண்ணண்டாப்பு பரிச்சைல கூட நறையாமார்க்கு வாங்கிர்கான். இங்கயும் நல்லா படிப்பான். நீங்க இங்க சேத்துக்கனும்”
                 “தம்பி எத்தண மார்க் நீ”
                 “அஅ……..   அறனூத்திபத்து”
                “அறனூத்திபத்துத்தா??                                    "சரி ஒன்னும் பிரச்சன இல்ல சேத்துக்கலாம். உனக்கு என்ன டிப்பாட்மண்டு தம்பி வேணும்?”
“எங்களுக்கு அத பத்தி எல்லாம் என்ன சார் தெரியபோகுது?நீங்களே நல்லதா பாத்து சொல்லுங்க சார்.இவன் படிப்பான்”
“இப்ப ஐ.டில தான் சீட்டு காலியா இருக்கு. நீ ஐ.டியே உனக்கு தாறேன். ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க எந்த ஊரு?”
                 “ஸ்ரீவில்லிப்புத்தூர் கிட்ட வத்திராய்ப்பு கிராமோ சார்”
“அப்ப தினனோ வந்து போக முடியாது. நீங்க ஹஸ்டல்ல சேர்ந்துக் கோங்க. முன் பணம் கட்டகாசு கொண்டு வந்திங்களா?”
“இருக்கு சார். போனபோகம் நல்ல வெளச்சல் வேர இவனுக்காண்டி காசுவேர சேத்து வச்சிருந்தேன்”
                 “டொனேஷன் மூனுருவா வருச பீசு எழுவதாயிரம் வரும் ஹாஸ்டலுக்கு அறுவது வரும், ஸ்டோர் பீஸ், வேல்யு ஆடட் கோர்ஸ், எக்ஸாம் பீஸ் டெபாசிடுனு மொத வருசம் மூனு எழுவது கட்டுனா போதும். அப்புறம் வருசம் வருசம் ஒன்னு எழுவதுகட்டுணா போது”
“அதெல்லாம் கட்டிர்வேன் சார். ஊர்ல வீடு காடெல்லாம் கடக்கு, அத வித்தா போகுது. படிச்சு முடிச்சப்பறம் இவனுக்கு நல்ல வேல கெடச்சா போதும் சார்?”
               “அந்த கவலை உங்களுக்கு வேணா .உங்க பையன நல்ல வேலைல சேத்துருவோம். உங்க பையன் எதிகாலத்துக்கு நாங்க உதிரவாதம்.”
              “அது போதும் சார்”
              “நீங்க வெளில வெய்டிங் ஹால்ல உக்காந்திருங்க. இப்பதைக்கு எவ்வளோ கட்டணும்னு எழுதி தருவாங்க”
“ரொம்ப நன்றி சார். நாங்க வறோம்”
காத்திருப்பவர்கள் அறை மிகவும் பரபரப்பாக இருந்தது. எதிரில் உள்ள கட்டணம் சொலுத்தும் வரிசை நீலமாக இருந்தது. இருவரும் அங்கு போடப்பட்டிருந்த இரும்புநாற்காளியில் அமர்ந்தனர்.
“ஏன்டா மவனே பெரிய காலேஜா இருக்கும் போலயேடா?” என்று கூறிய வாரே எல்லாவற்றையும் வியப்புடன் பார்த்தார். அவர் மனதில் சந்தோஷமும், பெருமையும் மொய்க்கத் தொடங்கியது.
“கிழக்கால கடக்குற நம்ம காட்ட வித்துருவோம். நறையா செலவாகும்னு சொல்றாங்கள்ள. எதுக்கும் காசு கைல வச்சிருப்போம். நீ மட்டும் நல்ல படிச்சுக்கராசா”

நான்கு வருடங்களுக்கு பிறகு,

இருவரும் அதே காத்திருப்பவர்கள் அறையில் அமர்ந்திருந்தனர். இரும்பு நாற்காளிகள் பஞ்சுநாற்காளிகளாக மாறியிருந்தது. மின்விசிரிகள் பறந்து குளிர்சாதணங்கள் குடிக்கொண்டிருந்தது. ஆனால் அதே பரபரப்பும், நீலமான கட்டணம் செலுத்தும் வரிசையும் மாறாமல் இருந்தது.
“ராசா இவங்க தர இந்த செர்டிபிகெட்ட வாங்கிட்டு நீ மெட்சாஸ் போயி நம்ம பாண்டியன் கூட சேந்துக்க ராசா. அவன் எதாவது வேல இருந்தா வாங்கித் தருவான். எந்த வேல கெடச்சாலும் சேந்துக்க ராசா. நாங்க ஐயா நெலத்துல வேல பாத்துக் கஞ்சிக் குடுச்சிக்கிறோம்.”


No comments:

Post a Comment