Sunday 26 January 2014

என் இனிய பொண் நிலாவே 3



            என் சுற்றதை சுருட்டி வைத்து
             உன் மிச்சத்தை அதில் நிற்க வைத்து
              உன் கரைகளில் என்னை நிறைய வைத்தாய். . . .

           உன் பாராமுகம் கண்டு,
            இயந்திரம் ஆனது
              என் கர்வம். . . . .

          உன் தொடுவிரல் கண்டு
            உணர்ச்சி இழந்தேன். . . .

         உன் மூச்சினால் என் காற்றில்
           வார்தைகளை புதைத்தாய்
             ரனமாய் உறைகிறது
               என் வெப்பம். . . .

         என் சுயநினைவுகள்
           உன் தனியுடைமை ஆனது
             நம் வலிகள் மட்டும்
               ஏன் பொதுவுடைமை ஆனது??. . . .


                                                                  என் இனிய பொன்நிலாவே. . .



            
                         நாணம் நகர்கிறது நான் கண்டேன்
            நானும் நனைகிறேன் பின் கண்டேன். . . .

         ஈரஉதடால் என்னுள் நீர்பாய்ச்சு
          உன் மேய்ச்சல் இல்லாமல்
           நான் காய்ச்சல் கொண்டுள்ளேன். . . . .

         உன் இதழ்களில் இணையும் பொழுது
          இயக்கமறுகிறேன் . . . .

        தொலைந்த இரவின் வெளிச்சம்
          வரும் பகலை இருல்லாக்கியது. . . .

       என் மேல் ஒரு பனிதுளி
         கொதித்தேன் இரு மணிதுளி. . . . .

    
 

  ஒரு விடைக்கு

           பல வினாக்கள் தந்தாய்
             என் வினாக்கள் வீணாகின்றன
               உன் ஒரு விடைக்காக. . . . ..

         உன் தாகத்திற்கு
           என் தருணங்கள் அழிந்தன
             என் நிகழ்வுகள்
               தேக்கம் கண்டன. . . .

         உன் சினம்தன்னில்
           காய்ச்சல் கொண்டது
             என் நிழல். . . .

          என் பாலை வனத்தில்
            பனிதுளி ஆனாய்,
              என் நிழலில்
                இருளாய் பின்
                  தொடர்ந்தாய். . . . .

         உன் காதருகில்
           கரையேறுவேன்
             கன்னம் கடித்தே
               காலம் தல்லுவேன். .. . .

           சுடசுட வென கண்ணீரை
             என் கண்களில் வடித்தாய்,
               வெதுவெது வென குளிர்ந்தது
                 என் விழித்திரை. . . . .

            உன் கன்னத்தை
              சுவைக்கும் பொழுதெல்லாம்
                கவிதை கசிகின்றது
                  அதை அருந்தும் பொழுதெல்லாம்
                    உன் கன்னம்
                      சிவக்கின்றது. . . . . .

              உன்னை நெருங்கையில்
                நனைகிறேன்
                  உன்னை தொடரையில்
                    தொலைகிறேன் . . . . .

               என் இரவெல்லாம்
                 வறுமை
                   என் மழைநிலவே
                     எதிர்பார்கிறேன்
                       உன் வரவை. . . . .


                 உன் வாடையில்
                   பல போதைகள்,
                     உமிழ்கிறாய்
                       உன்னை வருடையில்,
                         செயலிலந்தேன் முடிகையில். . . . .

                 முத்தத்தால்
                   உன் ஆடை நெய்வேன்,
                     மொத்தமாய்
                       என் வாடையில் தைப்பேன்,
                         யோசிக்காமல்
                           உன் நானத்தை மெள்வேன்,
                             சத்தமில்லாமல்
                               சில சாதணைகள் செய்வேன். . . ..

                  உன்னை முழுமையாக
                    வர்ணிக்கமுடியவில்லை,
                      இது
                        வார்த்தைகளின் வறுமையா??????.. . .
                          இல்லை என்
                            பார்வையின் பற்றாக்குறையா????? . . .  .

                   என் மழையின்
                     தாகம் நீதானா????
                       என் வெயிலின்
                        வியர்வை நீதானா????
                         என் குளிரில்
                          உறைபவள் நீதானா????

                   உன் கண்களை
                     வாசிக்கும் பொழுது தான்
                       எம்மொழியின்
                         ஆயுத எழுத்துகளை
                           அறிந்தேன். . . .

                  மழை மேகம்
                   என்னை படைசூழும்,
                    உன் வாசம்
                     என் வாசல்
                      வருகையில். . . .

                  தாகம் வேண்டுமடி எனக்கு,
                    உன் இதழ் கொண்டு அதை
                      அடக்குவாய் என்றால். . . . .

                   உன்னை வாசிக்கும் பொழுது
                     என்னில் எண்ணிலடங்கா
                       அர்த்தங்கள் கண்டேன். . . .


அணுஉலை விலுங்கிய மழலை ஆனேன்

                உன் குரலை அருந்திடும் நொடியில் நானே. . . . . .

            இலக்கண பிழை இல்லாமல்
              இலக்கியம் இயற்றா எண்ணுகிறேன்
                மொழி தெரியாமல்
                  உன் பெயரை முன்மொழிகிறேன். . . . . .

           உன் ஆணவத்தில்
              என் ஆண்மையை
                 பூப்பெய்த வைத்துவிட்டால். . . .

          உன் நகரும் நிமிடங்களுக்கு முன்
             என் விடியற் காலை வீழ்ந்துவிட்ட்து. . . . .
  
        உன் அழகுக்கான செய்யுளிள்
           நானே உரையாகிறேன் பிழை இல்லாமல். . . . .

        உன் சூழ்சியற்ற
          பார்வையில் கிளர்ச்சி எற்பட்டது
            என் மூச்சில். . . .

        அடைமழையில் வற்றிய
           கடலில் இரை தேடுகிறேன்
              உன் கண் வலைகாக. . . . .
  

  என் மாற்றங்களிள்

           நிகழ்வு போக்காய் வந்து
            என் நிகழ்வுகளில்
             மாற்றம் தந்தாய் நீ. . . .

         உன் தோள்கள் என் தலையனை
          என தருவாய் ஒரு அரசானை
           நான் தினமும் செய்வேன்
            அர்ச்சனை. . . . .

         உன் நிர்வாகத்தில்
          பிரதிநிதி ஆனேன்,
           உன் பிரிவில்
            நிர்வாணமானேன். . . .

         என் நிர்ணைக்கபட்ட விதிகளை
          ஆக்கிறமித்துவிட்டாய்
            உன் வரையறுக்கபட்ட  பார்வையில்
              சிறை வைக்கபட்டேன். . . .
         
         தாய்மொழி தேடினேன்
          எழுத்தில்லா புதுகவிதை
           வரைந்தேன். . . .
  

என்னை அன்பு கொள்ள வந்தாய்

நீ என் அன்னைதெரசா,
என்னை அழகாய் கொன்று சென்றாய்
நீ என்ன ஆன்டிவைரசா?????/

இதழ் கொண்ட கனி ஒன்று
நான் கண்டேன்,
இதயமற்று நானும்
நிற்க கண்டேன்….

என் இரவெல்லாம் தீக்கரையாகின,
தூக்கம் இல்லாமல் தூசி அடைந்தன…..

என் மேகங்களுக்கு ஏனோ தாகம்,
என் மழைக்கு உன் மீது மோகம்,
என் தூவானம் உன் சாரலில் சாகும்….

முதல் மழைதுளியில் நனைந்த தீப்பொறி ஆனேன்,
உன் எதார் த்த பார் வையின்
எதிரி ல் சாம்பளாய்  ச ரி ந்துவிட்டேன்…….

உன் மூச்சை பறித்து விட்டாய்,
உன் பேச்சையாவது கொடு
என் உயிருக்கு ஊதியமாய்……

என் மாலை பொழுதின் பூக்களாய் பூத்தாய்,
என் மது கோப்பைக்கு மயக்கம் தந்தாய்,
என் மயானம் வரை மழையாக பொழிந்தாய்….

முதன் முறையாக
என் இதய கதறலை
நான் கேட்டேன்,
உன் ஊமை விழிகள் பேசும்
மௌன மொழி புரியாமல்…..

நீ சிரித்து பேசும் சித்திரம், என்
செல்கள் எல்லாம் உன் சரித்திரம்……

உன்
இரட்டைவிழி உலாவளில், என்னுள்
இரட்டையலைகட்டரை ஊழல்…….

உன் சீண்டலில் என் அனுவை துளைத்து
உன் ஆழ்கடலை ஊற்றிவிட்டாய்….

ஏ பெண்னே,
நீ என்ன மதுக்குடுவையா?
உன் உதட்டு சாராயம் குடித்து அதன்
போதையில் புதைந்துகிடக்கிறேன்……

உன் இதழ் சுவைக்கும் பொழுது தெரிந்த்து
மதுவில் குளித்த மழைதுளிகள் சுறக்கும்
ஊற்று உன் இதழ் என்று…..

என் கனவெல்லாம் சந்திக்கின்ற
இரவு நீதான்,
என் ஒளியெல்லாம் சங்கமிக்கின்ற
பகலும் நீதான்,
என் நினைவெல்லாம் சம்பாதிக்கின்ற
வழியும் நீதான்,
என் மூச்சுகாற்றில் சாயம்பூசும்
வானவில் நீதான்……

இரவெல்லாம் உன் ஆடையில் தறிகின்றேன்,
பகலெல்லாம் உன் வாடையில் கரைகின்றேன்…..

உன்னை தெடும் போதையில்
விலையில்லா வெட்கங்கள்
வருகை பதிவு செய்த்து,
என் ஆண்கர்வம் துரவு பூண்டது……

உன் பார்வையில் நீ செய்யும்
படுகொலைகளுக்கு, உன் பாதையில்
சிறைவைக்கப்படுகிறேன் நான்…..

அடைமழையில் தறித்த
ஆடை அனிந்தேன்,
உன் அனல் பார்வையில்
தெரிந்த ஆணவத்தில்…….



உன் பெயரின் அணைத்து
எழுத்துக்களையும் அழித்துவிட்டேன்,
இருந்தும் அது கவிதை என்னும்
அந்தச்தை இலக்கவில்லை….

ஒளிநிலவின் நிழலில்
என் இதழோரம் உன் வாசனை,
என் விழியோரம் உன் யோசனை…..

இல்லாத தெருவில் புதுபுது தேர்கள்,
இருக்கின்ற கடலில் இல்லாத புயல்கள்,
வானவில்லை வளைத்து தருவேன் வளையல்,
விழகாமல் இருப்பாயா என் முடிவு வரையில்…..

உன் இடையில் இடைதேர்தல் வை,
உன் வெட்கங்களே என் வேட்பாளர்,
என் விரல்களில் தருவேன் வாக்குறுதி,
பொழுது சாய்ந்ததும் தொடங்கும் பிரச்சாரம்,
உன் உடைகளுக்குள் என் ஓட்டுச்சாவடி,
என் உதடுகளால் ஓட்டளிப்பேன்,
நான் விடியும் வரை சர்வாதிகாரி,
விடிகையில் என் சர்வமும் காலி……


நதி இல்லா வெள்ளம்
                  உன் வெட்கம் என்றாள்,
வழி இல்லா விண்மீன்
உன் கண்………

கார் மேகமும்
உன் கண்கள் பார்த்து
பிச்சை கேட்கும்,
உன் கருவிழியின்
எச்சம் தா என்று…..

இரு மழை துளியில்
ஒருவராய் நனைவோம்,
ஒரு மழையில் இரு துளியாய்
பெய்வோம்…..

எங்கெங்கோ தேடியும்
கேட்கவில்லை என் மூச்சை,
உன் அருகிலேயே கிடந்து
சுவாசிகிறேன் உன் பேச்சை…….

பருவ மங்கை
இவள் பார்வையில்,
என் பொய்த்துபோன
பாலை வனத்தில்
பருவ மழை……..


     
           உன் இறுக்கத்தில் இடம்
              தேடி அலைகிறேன்,
               அணைக்கையில் அனையாமல்
                 அனைகிறேன்…….

             இடைவிடாமல் உன் இதழ்
              நனைத்தேன்,
               உன் வேட்கத்தின் வியர்வையில்
                சொர்க்கம் விரைந்தேன்……

              உன் ரசாயன பார்வைக்கு
               ரசிகன் ஆனேன், அதன்
                விளைவு தெரியாமல்
                 விரயம் ஆனேன்…..

              தகடில் தறித்த
               தாமரை ஆனது
                என் தனிமை,
                 என் முழுமை அணைத்திலும்
                  உன் வருமை…..

              என் தாகத்தின்
               கனவு நீ,
                என் எதிர்காலத்தின்
                  விளைவு நீ…..

               உன்னில் பூத்திருப்பது
                விழியா இல்லை உழியா???
                 என்னை செதுக்கி
                   சிற்பமாக்கி
                     சிறை வைத்துவிட்டாய்…….
 

 

No comments:

Post a Comment