Saturday 8 February 2014

நண்பன்


                 நண்பன்
வெறுமையும் ஏமாற்றமும் தான் தன் வாழ்வில் நிறைந்திருப்பதாக எண்ணி ஆழ்ந்த சிந்தணையில் மூழ்கி இருந்தான். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, கண்எதிரே உள்ள சுவரை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.    யோசிப்பதை முடித்துக் கொண்டு,   ஒரு முடிவுக்கு வந்தது போல் பெருமூச்சுவிட்டு எழுந்தான்.    அருகில் இருந்து நாற்காளியில் ஏறி,   பரணியில் இருந்த தடித்தகயிற்றை எடுத்தான்.    நாற்காளியை காற்றாடிக்கு கிழ்போட்டு கயிற்றுடன் ஏறினான்.    அப்போது அவன் கைபேசியில் அழைப்பு வந்தது.    ஒரு நிமிடம் யார் அழைக்கிறார் என்று பார்க்க மனம் ஆசைப்பட்டது.    ஆனால் யாராக இருந்தாலும் அழைப்பை ஏற்ககூடாது என தீர்க்கமாக முடிவெடுத்துக் கொண்டான்.   அதனால் யார் என்று பார்க்கும் முடிவை கைவிட்டான்.    கயிற்றை காற்றாடியின் கம்பி மீது இறுக்க கட்டினான்.    இரண்டு கைகளையும் கயிற்றில் பிடித்துக் கொண்டு,    இத்தனை நாள் தன் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களையும்,    பார்த்த மனிதர்களையும் பற்றி தன்னை அறியாமல் நினைவுட்டிக் கொண்டிருந்தான்.    மறுபடியும் அவன் கைப்பேசி ஒளித்தது.  இம்முறை நான்கய்ந்து முறை தொடர்ச்சியாக ஒளித்தது.    இப்போது அவன் காதுகளில் அவை விழவில்லை.    அவன் மனம் பழைய நினைவுகளில் நனைந்துக் கொண்டிருந்தது .    அவன் பத்தாவது அகவையில் பெற்றோரை இழந்ததும்,    அன்று முதல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத யதார்த்தமான அன்புக்கு ஏங்கியதும்,    கும்மாளமாய் இன்பத்தில் மூழ்கடிக்க நண்பர் கூட்டம் இல்லாமல் போனதும்,     நினைக்கின்ற நொடியை அழகாய் மாற்றி தன் வாழ்வை அர்த்தமுள்ள அலங்காரமாய் மாற்ற காதலி இல்லாமல் போனதையும்,    தனிமையில் தருணங்களை கலுவியதையும்,   படுக்கை தலையணையை தாய் மடியாய் பாவித்ததையும்,  தனக்கு இருந்த ஒரே நண்பனும்,   நேற்று அவனுடன் போட்ட சண்டையும்,   உன்க்கூட இனி நா பேசுனா என்ன செருப்பால அடிடா   என அவன் கடைசியாக கூறி சென்ற வார்த்தைகளும் அவன் இடதுகண் முதல் வலதுகண் வரை வரிசையாய் ஓடிக்கொண்டிருந்தது.    அவன் சுவைத்த மகிழ்ச்சிகள் மிக மிக குறைவு.   இனி தனக்கு யாரும் இல்லை,    தான் நேசித்து பழகிய ஒரே நண்பனும் போய் விட்டான்,   அவன் சுகங்களை பகிர்ந்து தன் துக்கத்தை அவனுடைய தாக்கிய ஒரே நண்பன் இன்று இல்லை.   கண்களில் ஈரம் மூண்டது.   மறுபடியும் அவன் கைப்பேசி ஒளித்தது.   சட்டென்று சுதாரித்து,   கைபேசியை அணைத்து தூக்கி எறிய முடிவு செய்து நாற்காளியில் இருந்து இறங்கிகைப் பேசியை எடுத்தான்.   அவன் ஒரே நண்பனிடம் இருந்து அழைப்பு வந்துக் கொண்டிருந்தது.    அவன் பெயரை பார்த்தவுடன்,    அழைப்பை ஏற்க விரல்கள் முனைந்தன.   ஆனால் அவன் மனம் இடம் தரவில்லை.    கண் இமைக்காமல் கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.   கடைசியாக அவன் குரலயாவது கேட்கலாம் என்று எண்ணி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
டேய்   ******,    போன் பன்னா எடுக்கமாட்டியா? முந்தானேத்து உன்ட என்னடா சொன்னே சனிக்கிழமை நைட் ஷோக்கு நமக்கு டிக்கெட் புக் பண்டேன்.   கலறாம வானு சொன்னேன்ல.   இப்பவே மணி ஒன்பதரையாச்சு கெளம்பிட்டயா இல்லயாட????”
இல்ல மாமா. நா வரல.  நீ போய்ட்டு வாஎன தயங்கி தயங்கி கூறினான்.
                        டேய் உன்ன விட்டு நா மட்டும் போவா?   ரூம்ல உக்காந்து என்ன    ***கபோற.    ஒழுங்க கெளம்பிவா
                          சரி மாமா.   இப்ப கெளம்பி வரேன்   என இனம் புரியாத உத்வேகத்துடன் கூறினான்.
ரூம்ல இருந்து பஸ் ஸ்டாப்புக்கு நடந்து வந்து பஸ் ஏறி வர லேட்டாகும். நா வண்டி எடுத்துக்கிட்டு அங்க வரேன்.   நீ ரெடியா இரு மாப்ல்
                          சரி வா
பத்து நிமிடத்தில் கிழே ஹாரன் சத்தம் கேட்டது.
இரு மாமா கதவ பூட்டிக்கிட்டு இருக்கேன் வந்துட்டேன்

No comments:

Post a Comment